டில்லிபாபுவை இழிவாகப் பேசிய திருவள்ளூர் இன்ஸ்பெக்டர்!
விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி நடந்த போராட்டத்தில் போலீஸ் அராஜகம்
மிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. டில்லிபாபு மற்றும் விவசாயிகளிடம் அநாகரிகமாகவும், அராஜகமாகவும் நடந்து கொண்ட திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பலகட்டமாக போராடியும் இதுவரை தீர்வில்லை இதுதொடர்பாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செய லாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: விழுப்புரம் மாவட்டம் திண்டி வனத்திலிருந்து, ஆந்திர மாநிலம் நகரி வரை புதிதாக அமைக்கப்படவுள்ள ரயில்வே பாதைக்காக நிலம் கையகப் படுத்தப்பட்டதில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு சட்டரீதியான உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை.
அதேபோல NH 205 தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு நிலம் தந்த விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் பலகட்ட போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். மனு அளிப்பதை தடுத்து தகாத வார்த்தையில் பேசுவதா? அந்த வகையில், நிலத்தை இழந்த விவசாயிகள் 26.03.2025 அன்றும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி. டில்லிபாபு தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பதற்காக வந்தபோது, காவல்துறையினர் தடுத்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு நிற்கக்கூட அனுமதிக்காமல் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளை ஒருமையிலும், தகாத வார்த்தைகளிலும் பேசியுள்ளனர். குறிப்பாக திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் என்பவர் 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பின ராக இருந்த டில்லிபாபுவை ஒருமையில் கெட்ட வார்த்தைகளில் பேசி தர, தரவென இழுத்துச் சென்று கைது செய்துள்ளார்.
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை வேண்டும் இச்செயலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் அவர்கள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டு மென தமிழ்நாடு அரசை வலியுறுத்து வதோடு, பாதிக்கப்பட்ட நிலம் வழங்கிய விவசாயிகளுக்கும், நகரி திண்டிவனம், ரயில்வே நிலம் வழங்கிய விவசாயி களுக்கும் இழப்பீடு உடனே வழங்கிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தும்போது காவல்துறை யினர் நடவடிக்கை மிக மோசமாக உள்ளது. உதாரணமாக, கடலூர் அருகே கடந்த வாரம் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திலும் காவல்துறையினர் நடவடிக்கை அருவருக்கத்தக்கதாக இருந்தது.
காவல்துறை அடக்குமுறையை வேடிக்கை பார்க்கக் கூடாது எனவே, மாநில அரசு குறிப்பாக முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் ஜனநாயகமற்ற, அடக்குமுறை அணுகுமுறையை அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது நல்லதல்ல. சட்டம் அனுமதித்துள்ள ஜனநா யகப்பூர்வமான போராட்டங்களை நடத்துவதற்குக் கூட காவல்துறை அனு மதிக்கவில்லை என்றால், அது ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய அவப் பெயரை ஏற்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு சாமி.நடராஜன் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.