tamilnadu

தேனி மற்றும் விருதுநகர் முக்கிய செய்திகள்

முல்லைப்பெரியாற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

தேனி, ஜூன் 1- தேனி மாவட்டம் கூடலூரைச்  சேர்ந்த கணேசன் மகன் கௌதம் (19) மற்றும்  பாஸ்கரன் மகன் பிரகதீஸ்வரன் (17) இரு வரும் உறவினர்கள். கௌதம் பன்னி ரண்டாவது படித்துள்ளார். பிரகதீஸ்வ ரன் கோட்டூரில் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வருகிறார். திங்களன்று  இவர்கள் அவர்களது நண்பர்கள் கேசவன், ஸ்ரீஜித் ஆகியோருடன் கூடலூர் அருகே காஞ்சி மரத்துறை மரப்பாலம் பகுதியில்  முல்லைப்பெரியாற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக்கொண்டி ருக்கையில், பிரகதீஸ்வரன், கௌதம் இருவரும் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற நிலையில் நீந்த முடியாமல் தண்ணீ ரில் சிக்கியுள்ளனர். உடன் சென்ற நண்பர் கள் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். அதற்குள்  கௌதம், பிரகதீஸ்வரன் மூச்சுத்திணறி உயிரிழந்த னர். பொதுமக்கள் ஆற்றில் இறங்கி இரு வரின் உடலையும் மீட்டனர். லோயர் கேம்ப் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஊழல் புகாரில் சிக்கியுள்ள ஆமத்தூர் கூட்டுறவு வங்கி

நிவாரணம் கிடைக்கவில்லை

கலாச்சார கலைஞர்கள் புகார்

விருதுநகர், ஜூன் 1- கலை பண்பாட்டுத்துறையின் மூலம் கிராமிய கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், பாதிக்கும் மேற்பட்டோருக்கு நிவாரணத் தொகை கிடைக்கவில்லையென தமிழ் கலாச்சாரக் கலைஞர்களின் கூட்ட மைப்புக் கழகத்தினர் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் அளித்துள்ள புகார் மனு வில் கூறியிருப்பதாவது:- கலை பண்பாட் டுத்துறையின் மூலம் : நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறி வித்தது. ஆனால், 60 வயது நிரம்பிய மற்றும் பாதிக்கும் மேற்பட்டோருக்கு பணம் வந்து சேரவில்லை. எனவே, அனை வருக்கும் நிவாரணத் தொகை கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரா மியக் கலைஞர்களை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.  ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கிராமிய கலைஞர்களுக்கு நிவாரணமாக ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என மனு வில் குறிப்பிட்டுள்ளனர்.

கொள்முதல் நிலையம்: திறக்க கோரிக்கை 

விருதுநகர், ஜூன் 1- விருதுநகர் மாவட்டம், வத்திரா யிருப்பு அருகே ராமசாமியாபுரத்தில் எவ்வித அறிவிப்புமின்றி மூடப்பட்ட  நெல்கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரி டம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி இருளப்பன் கூறியதாவது:-  ராமசாமியாபுரம், கூமாப் பட்டி ஆகிய இடங்களில் நெல் கொள் முதல் திறக்கப்பட்டு 12 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அறுவடை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கொள்முதல் செய்வது நிறுத்தப் பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே, நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி மே.19- இல் புகார் மனு அளித்தேன். அப்போது ஜூன்.1-இல் திறக்கப்படும் என பதில் தரப்பட்டது. ஆனால், திறக்கப் படவில்லை. விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டுமென்றார்.