மதுரை, ஏப்.11-திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்மாநில தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருமான சு.வெங்கடேசனை ஆதரித்து எழுத்தாணிக்காரத் தெருவில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் வீடு வீடாகச் சென்று வியாழனன்று வாக்கு சேகரித்தனர்.இந்தப் பிரச்சாரத்தை எழுத்தாளர் கலாப்பிரியா துவக்கிவைத்தார். சு.வெங்கடேசனுக்கு வாக்குச் சேகரித்து யவனிகா ஸ்ரீராம், இரா.முருகவேல், சம்சுதீன் ஹீரா,சக்திஜோதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் ச.தமிழ்செல்வன், மாநில துணைத் தலைவர் என்.நன்மாறன், மாநிலச்செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், சாத்தூர் இலட்சுமணபெருமாள், முத்து நிலவன் ஆகியோர் பேசினர். நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்-கலைஞர்கள் கலந்துகொண்டனர்.