அதானிக்காக நாட்டின் பாதுகாப்பை காவு கொடுத்த ஒன்றிய பாஜக அரசு!
அதானியின் சூரிய எரிசக்தி மின் திட்டத்திற்காக பாகிஸ்தான் உட னான எல்லைப் பாதுகாப்பு விதி களையே ஒன்றிய பாஜக அரசு தளர்த்தி இருப்பது அம்பலமாகி இருக்கிறது. எல்லைப் பாதுகாப்பு விதி களின் படி, பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீ. வரை எவ்வித கட்டுமானத்திற்கும் அனுமதி இல்லை. ஆனால் குஜராத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அர சானது, பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1 கி.மீ. வரை சூரிய மின் தகடுகள், காற்றாலைகளை அமைப்பதற்காக சுமார் 25 ஆயி ரம் ஹெக்டேர் அளவிற்கான நிலங்களை அதானிக்குத் தூக்கிக் கொடுத்துள்ளது.
இந்த நிலங்களில் அதானி குழுமம் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்னுற்பத்தி செய்து கொள்வதற்கு தோதாக, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகமானது, கடந்த 2023-ஆம் ஆண்டு மே 8 அன்று எல்லைப் பாதுகாப்பு விதி களிலேயே திருத்தமும் செய்துள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நிலங் களை அதானிக்கு கொடுப்பதற் காக 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே பல்வேறு தகிடுதத்த வேலைகள் நடந்துள்ளன. முதலாவதாக, குஜராத்தின் ‘ரான் ஆப் கட்ச்’ பகுதியில் 72,400 ஹெக்டேரில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி கலப்பின திட்டங்களைக் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைக்கும் திட்ட மானது, அரசு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுவதாகவே 2019 ஜனவரியில் கூறப் பட்டிருந்தது.
மொத்தமுள்ள 72,400 ஹெக் டேரில், இரண்டு ஒன்றிய அரசு மற்றும் 2 குஜராத் அரசு நிறு வனங்கள் என 4 நிறுவனங்கள் திட்டங்கள் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது. இதில், 23,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய பகுதி ஒன்றிய அரசின் நிறுவனமான இந்திய சூரிய ஆற்றல் கழகத்தின் (SECI) காற் றாலை திட்டத்திற்காக பிரத்தி யேகமாக ஒதுக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையிலான காவ்டா சோலார் பூங்காவையும் 2020 டிசம்பரில் பிரதமர் மோடி திறந்து வைத்திருந்தார்.
இதனிடையே, 2023-இல் இந்திய சூரிய ஆற்றல் கழகம் (SECI), ஒரு சில காரணங்களைக் கூறி, நிலத்தை திருப்பி ஒப்படை ப்பதாக அறிவித்த பின்னணியில், குஜராத் பாஜக அரசாங்கமானது, அந்த 23 ஆயிரம் ஹெக்டேரையும் வேகவேகமாக அதானி குழு மத்திற்கு ஒதுக்கியுள்ளது. தற்போது சுமார் 445 சதுர கி.மீ. நிலத்தை அதானி பெற்றுள்ளது.
முந்தைய ஒதுக்கீடு அதானி கிரீன் எனர்ஜிக்கு இருந்த நிலை யில், இந்த முறை, அதானி பவர் மற்றும் அதன் சகோதர நிறுவன மான முந்த்ரா சோலார் டெக்னாலஜி உள்ளிட்டவை மொத்தமாக களத்தில் இறங்கி, நிலங்களை தங் களுக்கு சூறையாடிக் கொண்டுள்ளன. மேலும், எல்லையில் இருந்து 1 கி.மீ. முதல் 2 கி.மீ. வரை காற்றா லைகளை அமைக்கவும், எல்லை யில் இருந்து 2 கி.மீ. முதல் 8 கி.மீ. வரை, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்திகள் இரண்டையும் உள்ளடக்கிய கலப்பின புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவ வும், ஒன்றிய பாதுகாப்பு அமைச்ச கமும், பாதுகாப்பு விதிகளைத் திருத்தி தமது ஒப்புதலை வழங்கி யுள்ளது.
ற்ற கூட்டத்தில், கண்ணிவெடி கள், டாங்கி எதிர்ப்பு மற்றும் பணி யாளர் எதிர்ப்பு வழிமுறைகளை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட் டால் என்ன செய்வது? என்று பாது காப்பு அதிகாரிகள் ஆட்சேபம் எழுப்பியுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து எளிதில் தாக்கும் தூரத்திற்குள் ஒரு பெரிய தனியார் திட்டத்தை ஏன் அனுமதிக்கிறீர்கள், இதன் மூலம் நமது ஆயுதப் படைகளின் பாது காப்பு சுமைகளை அதிகரிப்பது ஆகாதா? என்றெல்லாம் கேட்டுள்ளனர். எனினும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி மோடி அரசானது, அதானி கொள்ளைக்காக நாட்டின் பாதுகாப்பையும் அடகு வைத்துள்ளது.
இந்த உண்மை தற்போது வெளிச் சத்திற்கு வந்துள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமரும், ஒன்றிய அரசும் உரிய பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். “கட்ச் ரான் மற்றும் அருகிலுள்ள சர்வதேச எல்லையில் பாதுகாப்பு விதிகளை தளர்த்தியதன் மூலம், பெருநிறுவனங்களின் இலாபத்திற்கான பேராசையை பூர்த்தி செய்து, இந்திய நாட்டை பாதுகாப்பதற்கான தொழில்முறை தேவைகளை ஒன்றிய அரசு சமரசம் செய்துள்ளது” என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.