சிவகங்கை ,ஜூன் 5- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்அனைவருக்கும் வேலையும், முழுச் சம்பளமும் வழங்க கேட்டு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. சிவகங்கையில் மாவட்ட செயலாளர் மணியம்மா தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் மனு கொடுத்து பேசினார்கள்.ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன், ஒன்றிய துணைச் செயலாளர் பாண்டி,சிபிஎம் ஒன்றிய செயலாளர் உலகநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் தேவகோட்டையில் பொன்னுச்சாமி தலைமையில் மனு கொடுத்தனர்.
மானாமதுரையில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் மனு கொடுத்தனர்.உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருப்புவனத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் ரவி தலைமையில் ஆணையாளர் ரெத்தினவேலூவிடம் மனு கொடுத்தனர். விச ஒன்றிய செயலாளர் சின்னக் கருப்பன் , ஒன்றியத் தலைவர் நீலமேகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லலில் விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் வேணுகோபால் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காளையார்கோவிலில் விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் முத்துராஜா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.