tamilnadu

img

மருத்துவ ஊழியர்கள் விவகாரம்: வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

சென்னை, ஏப்.23- கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்து வர்கள், செவிலியர்களின் வாடகை வீட்டை காலி  செய்யுமாறு வற்புறுத்தும் உரிமையாளர் கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள  அறிவிப்பு வருமாறு:-

கொரோனா சிகிச்சைப் பணியில் இருப்ப வர்களை வீட்டைக் காலிசெய்யுமாறு வீட்டின் உரி மையாளர்கள் வற்புறுத்தி வருவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. கொரோனா தடுப்புப் பணி யில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள்,  தூய்மைப்பணியாளர்களை வீடுகளை காலி செய்ய வற்புறுத்துவது பொது சேவையில் ஈடுபடு வோரை பணி செய்யவிடாமல் தடுப்பதாகும். புகார்  கள் வரும் பட்சத்தில் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சி யர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் நகராட்சி ஆனையர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.