tamilnadu

பாஜக சார்ந்த பிரமுகர் ஒருவர் மீது கூட அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்ததில்லை!

பாஜக சார்ந்த பிரமுகர் ஒருவர் மீது கூட அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்ததில்லை!

சிபிஐ(எம்எல்) பீகார் எம்.பி., குற்றச்சாட்டு

பாஜக சார்ந்த பிரமுகர்கள் ஒருவர் மீதும்  அமலாக்கத் துறையோ, சிபிஐயோ நடவ டிக்கை எடுத்ததில்லை என்றார் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினரும் பீகார் மாநில நாடாளுமன்ற உறுப் பினருமான ராஜாராம் சிங். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்துக்கு புதன்கிழமை சென்று, அந்த மக்களைச் சந்தித்து திரும்பிய அவர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு எதிராக வும், அவர்களால் பாதிக்கப்படும் பட்டிய லின மக்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு ஆதரவாகவும் இந்திய கம்யூ னிஸ்ட் (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) கட்சி நிற்கும். அந்த வகையில், நாளுக்கு நாள் நாட்டின்  கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கும் வகை யில் செயல்பட்டு வரும் பிரதமர் மோடிக்கு  எதிராகவும், அண்ணல் அம்பேத்கர் உரு வாக்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வும் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக் கிறோம். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ போன்ற  முகமைகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளின் பிரமுகர்களைக் குறிவைத்து பாஜக நடவ டிக்கை எடுக்கிறது. பாஜக சார்ந்த பிர முகர்கள் ஒருவர் மீதும் இந்த அமைப்புகள் எந்த நடவடிக்கையையும் எடுத்ததில்லை. மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு ஒப்பீட்டளவில் எண்ணிக்கை யில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தமிழ் நாடு அரசின் குரலுக்கு ஆதரவாக இருக் கிறோம். ஆளுநர்கள் மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை கட்டுப்படுத் தும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசின் போக்கு சரியல்ல. வேங்கைவயல் கிராமத்தைப் பொறுத்த வரை சொந்த நிலமில்லாத பட்டியலின மக்க ளுக்கு நிலம் வழங்கவும், தண்ணீர் தொட்டி யில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில்  உரிய நீதி வழங்கவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன். வேங்கைவயல் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உரி மையை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். இவ்வாறு ராஜாராம் சிங் கூறினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பாலசுந்தரம், மாநிலச் செயலர் பழ. ஆசைத்தம்பி, விவசாயி கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் சந்திர மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.