tamilnadu

img

உழைப்புச் சுரண்டலுக்கு எதிரானதே பணிநிரந்தரக் கோரிக்கை!

உழைப்புச் சுரண்டலுக்கு எதிரானதே பணிநிரந்தரக் கோரிக்கை!

சென்னை, ஆக. 18 - தனியார்மயத்தின் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவே, தொழி லாளர்கள் பணிநிரந்தரம் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார். இதுதொடர்பாக சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றை, பெ. சண்முகம் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “சட்டத்தின் அடிப்படையில்தான் எங்களை பணி நிரந்தரம் செய்யு ங்கள் என்று தொ ழிற்சங்கங்க ளும், போராடக் கூடிய மக்களும் கேட்டுக் கொண்டு இருக் கிறார்கள். சட்டத்தை அமல்படுத்து என்று சொல்வது குற்றம் ஆகாது. பரம்பரையாக அந்த மக்களே செய்ய வேண்டும் என்று யாரும் கோ ரிக்கை வைக்கவில்லை. 1993-ஆம் ஆண்டு ஒன்றிய அரசா ங்கம் தூய்மைப் பணியாளர்களுக் கான சட்டத்தை இயற்றி இருக்கிறது. அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், இது வரை எத்தனை தூய்மைப் பணி யாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது? சட்டமே இருந்தாலும் கூட, எந்த விதமான பணிப் பாதுகாப்பு, மறு வாழ்வுக்கு உறுதுணையான திட்டங் களும் இல்லாத நிலையில் தான்  கடுமையான உழைப்புச் சுரண்ட லுக்கு அந்த மக்கள் ஆளாகி இருக்கிறார்கள்.” இவ்வாறு பெ. சண்முகம் கூறியுள்ளார்.