மதுரை, மார்ச் 24- மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏழு பேர் கொரானோ தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.ஜி.வினய் செவ்வயான்று கூறினார். அவர், “மதுரை அரசு மருத்துவமனை யில் கொரானோ வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரின் குடும்பத்தினருக்கும் மருத்துவப் பரி சோதனை செய்யப்பட்டுள்ளது, எதிர் வீட்டு க்காரின் இல்ல விழாவில் சம்பந்தப்பட்ட நபர் 9-ஆம் தேதி பங்கேற்றுள்ளார், வெளிநாட்டிலி ருந்து வந்தவர்களுடன் வெளியே சென்று வந்துள்ளார். கொரானோ பாதிக்கப்பட்ட நபர் வசிக்கும் பகுதி, அவர் சென்று வந்த இடங்க ளை தூய்மைபடுத்தும் பணி மேற்கொள்ள ப்பட்டது. நோயாளியுடன் 60 பேர் நேரடித் தொடர்பில் இருந்துள்ளனர் என்றார். மேலும் அவர் கூறுகையில், மதுரை அரசு மருத்துவமனையில் ஏழு பேர் கொரானோ தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள னர். 144 தடை உத்தரவு குறித்து அமலில் இரு ந்தாலும் மக்களுக்கு தேவையான பொரு ட்கள் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வந்த 439 பேர் வீடுக ளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அவர்க ளைக் கண்காணிக்க தலா மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.