tamilnadu

img

கக்கன் திரைப்பட பாடலை வெளியிட்டார் முதலமைச்சர்

சென்னை, ஜூலை 25- கக்கன் திரைப்பட பாடலை புதன்கிழமை  (ஜூலை 26) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  சுதந்திர போராட்ட வீரர் கக்கன். முதல் பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் 1952 முதல் 1957 வரை எம்.பி.யாக இருந்தார் கக்கன். காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சராக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் எளிமைக்கும் நேர்மைக்கும் உதாரணமாக திகழ்ந்த கக்கன் வாழ்க்கை இப்போது திரைப்படம் ஆகியுள்ளது. இந்தப் படத்தில் கக்கனாக  நடித்திருக்கும் ஜோசப் பேபி, படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன் இரும்பு மனிதன் தமிழ் திரைப்படத்தையும் தயாரித்து இருக்கிறார்.  இந்த படத்தை பிரபு மாணிக் கம் என்பவர் இயக்கி வருகிறார்.  தேவா இசை அமைக்கும் இந்த படத்திற்கு  வெங்கி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடு மலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடை பெற்று வருகிறது. கக்கன் பிறந்த ஊரான தும்பைப்பட்டியிலும் சில காட்சிகள்  படமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை தேனாம் பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த  விழாவில், மறைந்த காங்கிரஸ் மூத்த தலை வரும், சுதந்திர போராட்ட வீரருமான கக்கன்  வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் இசை, முன்னோட்டம் உள்ளிட்ட ஒலிவட்டு (அ) குறுந்தகம் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  இந்நிகழ்வின் போது தியாகி கக்கன்  மகள் கஸ்தூரிபாய், சேலம் சரக காவல்துறை  துணைத் தலைவர் எஸ்.ராஜேஸ்வரி மற்றும் இசையமைப்பாளர் தேவா, அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ‘கக்கன்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.