tamilnadu

img

பிறரை நேசிக்கும் நோய்!

பிறரை  நேசிக்கும் நோய்!

இந்நாட்களில் எனக்கு  ஒரு நோய் வந்திருக்கிறது.  ஆங்கிலத்தை வெறுக்க  நினைக்கிறேன்-ஆனால்  ஷேக்ஸ்பியர் அதை  அனுமதிப்பதில்லை.  முஸ்லிம்களை வெறுக்க  நினைக்கிறேன்-ஆனால்  மிர்சா காலிபின்  உருது கவிதைகள்  அதை தடுக்கின்றன.  சீக்கியர்களை வெறுக்க  நினைக்கிறேன்-ஆனால்  குருநானக்கின் உபதேசங்கள்  என் கண்களை நிரப்புகின்றன.  கம்பன், தியாகராஜர்,  முத்துசாமி தீட்சிதர் “அவர்கள் நம்மவர்கள் அல்ல” என்று மனம் ஆயிரம் முறை  சொன்னாலும், உண்மையை நோக்கிய  அவர்களின் சொற்கள் என்னை  வெறுக்க விடுவதில்லை.  என் முதல் காதலை  வெறுக்க நினைக்கிறேன்-  ஆனால் இப்போது அவள் என் சகோதரி போலத்  தோன்றுகிறாள்.  எனக்கு வந்த நோய்  பிறரை நேசிக்கும் நோய். இது அடுத்த நூறு  ஆண்டுகளுக்கும் நமது தேசிய  நோயாகட்டும்.  இதற்கு மருந்து எதுவும்  கண்டுபிடிக்கப்பட வேண்டாம். ஏனெனில், இந்த நோய் என்னை நேராக  சொர்க்கத்திற்கே  அழைத்துச் செல்கிறது.  -கவிஞர் நாராயணன்  (இந்தி மூலத்திலிருந்து  ஆங்கிலத்தில் பேரா.இராஜேந்திரசென்னி)