தற்காலிகப் போர் நிறுத்தம்: உக்ரைன் ஒப்புதல்
ரஷ்யா உடனான போரை, 30 நாட்க ளுக்கு நிறுத்த உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நக ரில், செவ்வாயன்று (மார்ச் 11) நடை பெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை யில், “உக்ரைன் 30 நாள் போர் நிறுத் தத்திற்கு ஒப்புக்கொண்டது; அமெ ரிக்காவும் உக்ரைனுக்கு பாது காப்பு மற்றும் உளவுத்துறை உதவி யை உடனடியாக மீண்டும் துவங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலை வர்கள் இந்த அறிவிப்பை திருப்பு முனை நடவடிக்கை என பாராட்டி யுள்ளனர். “போர் நிறுத்தம் தற்காலிகமான தாக இருக்கக் கூடாது; அவ்வாறு இருந் தால் நாங்கள் அதனை ஏற்க மாட் டோம். ஏனெனில் அது உக்ரைனை ராணுவ ரீதியாக பலப்படுத்தும் நட வடிக்கையாக அது மாறிவிடும்” என ரஷ்யா கூறியிருக்கும் நிலையில், சவூ தியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அமெரிக்கா தெரிவித் துள்ளது. அடுத்த சில நாட்களில் சவூதியில் அமெரிக்க - ரஷ்ய அதிகாரிகள் சந் திக்க உள்ளனர். மேலும், இந்த ஒப் பந்தம் குறித்து, ரஷ்ய ஜனாதிபதி யுடன் தானே நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக டிரம்பும் அறிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா போரைப் பயன் படுத்தி ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டமாக இருந்தது.
கடந்த 3 ஆண்டுகளில் அது கொஞ்சம் கூட நிறைவேறாத நிலையில், ரஷ்யா உடன் சமரசமாக செல்வது, தனக்கு எதிரான வலுவான வர்த்தகப் போட்டி யாளராக உருவெடுத்துள்ள சீனாவு டன் ரஷ்யாவுக்கு இருக்கும் நெருக் கத்தை உடைப்பது; அதிவேகமாக முன்னேறும் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் போட்டியிடுவதற்கு உக்ரைனில் உள்ள அரிய கனிமங்கள் தேவைப்படும் நிலையில், இவ்வளவு காலமும் போரில் ஆயுதங்கள், பண உதவி வழங்கியதற்கு பிரதிபலனாக உக்ரைனின் அரியவகை கனிமத்தை கைப்பற்றுவது என்று அமெரிக்கா தனது திட்டங்களை மாற்றியுள்ளது. இந்த அடிப்படையில் ரஷ்யா வுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அமெ ரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்யாவு டன் மீண்டும் பொருளாதார உறவு களை துவங்குவது பற்றி கடந்த மாதம் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தையை நடத்தினார். மேலும், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட டிரம்ப், போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் உடன்பட வேண்டும் என்ற நெருக்கடியையும் ஆரம்பித்தார்.
அமெரிக்காவின் இந்த திடீர் மாற் றத்தை ஜீரணிக்க முடியாத உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, வெள்ளை மாளிகையில் டிரம்ப் உடனான பேச்சு வார்த்தையில் முரண்பட்டு பாதியி லேயே வெளியேறினார். கோபமடைந்த டிரம்ப், தனது பேச்சைக் கேட்காத உக்ரைனுக்கு ஆயுத உதவிகள், உளவு உதவிகளை முற்றிலுமாக நிறுத்தினார். இதனால் வேறு வழியின்றி, சில நாட்களிலேயே பேச்சுவார்த்தையில் நடந்த நிகழ்வுக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்த ஜெலன்ஸ்கி, போர் நிறுத்தப் பேச்சு வார்த்தைக்கு தயார் என அறிவித் தார். இந்நிலையில் தான், சவூதி அரேபி யாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யின் முடிவில் ரஷ்யா உடனான போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக் கொண்டுள்ளார். அமெரிக்க உத்தரவுப்படி ரஷ்யா வுடன் போரை நடத்திய உக்ரைன், தற்போது அதே அமெரிக்காவின் உத்த ரவுக்கு கட்டுப்பட்டு போர் நிறுத்தத் திற்கு சம்மதித்துள்ளது.