tamilnadu

img

கோவில் நிலத்தை பயன்படுத்துவோருக்கே சொந்தமாக்கி அறிவிக்க வேண்டும்!

கோவில் நிலத்தை பயன்படுத்துவோருக்கே சொந்தமாக்கி அறிவிக்க வேண்டும்!

சென்னை போராட்டத்தில் பெ. சண்முகம் பேச்சு'

“கோவில் நிலத்தை பயன்படுத்து வோருக்கே சொந்தமாக்கி அறிவிக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தினார். கோயில் நிலங்கள், வக்பு வாரிய இடங்களில் குடியிருப்பவர்கள், சாகு படி செய்பவர்களுக்கும் பட்டா வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வியாழனன்று (ஏப்.17) மாநிலம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகங்கள் முன்பு தர்ணா நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் நாளில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் இந்த போராட்டத்தை நடத்தியது. சங்கத்தின் மாநிலத் தலைவர்  வ. செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத் தலைவரும் - மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான பெ. சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாநிலச் செயலாளர் துளசி நாராயணன், சங்க நிர்வாகிகள் வி. குணசேகர், கே. முருகன் (மத்திய சென்னை), எம். நடராஜன் (தென் சென்னை), எஸ். குணசேகர் (செங் கல்பட்டு), எம்.வி. நக்கீரன் (திருவள்ளூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது, செய்தியாளர்களுக்கு பெ. சண்முகம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவில், அறநிலையத்துறை க்கு சொந்தமான இடங்களில் தலை முறை தலைமுறையாக மக்கள் வசிக் கின்றனர்; குத்தகை விவசாயம் செய்கின் றனர். இந்நிலையில், புதுப்புது விதிகளை கொண்டு வந்து குடியிருப் போரையும், விவசாயிகளையும் வெளியேற்றும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை ஈடுபடுகிறது. வாடகையை அபரிமிதமாக உயர்த்து வது, முன் தேதியிட்டு வசூலிப்பது, வாட கையை உரிய நேரத்தில் செலுத்த முடியாதவர்களை உடனடியாக வெளியேற்றுவது என்று துறை அதி காரிகள் அடாவடியாக செயல்படுகின் றனர். 40 வருட வாடகையை உடனடி யாக செலுத்த சொல்வதும், செலுத்த முடியாதவர்களை ஆக்கிரமிப்பாளர் என வெளியேற்றுவதும் ஏற்புடைய தல்ல. அறநிலையத்துறை இடத்தில் வசிப்போரை எக்காரணம் கொண் டும் வெளியேற்றக் கூடாது. அறநிலையத்துறை சட்டத்தின் 34-ஆவது பிரிவு, கோயில் நிலங்க ளில் ஏழை - எளிய மக்களுக்கு பட்டா வழங்கலாம் என்று கூறுகிறது. அதன் படி 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி யில் அரசாணை 318 பிறப்பிக்கப் பட்டு, 600 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இந்துத்துவாவாதிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதனை தடுத்து நிறுத்தினர். எனவே, இந்தப் பிரச்சனைக ளுக்கு நிரந்தர தீர்வு காண முதல மைச்சரையும், அறநிலையத்துறை அமைச்சரையும் ஏப்ரல் 16 அன்று சந்தித்து பேசினோம். குடியிருப்போர் எக்காரணம் கொண்டும் அகற்றப் படமாட்டார்கள் என்று முதலமைச்ச ரும், அமைச்சரும் உறுதியளித்தனர்.  இருப்பினும், கோவில் நிலத்தில் வசிப்போருக்கு நிலத்தை சொந்தமா க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அதற்கான விலையை தீர்மானித்து தவணை முறையில் வசூலித்துக் கொள்ள வேண்டும். விவசாயிகள், நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வரும் நிலையில், மறு ஏலம் என்ற பெயரில் புதிய நபர்களுக்கு தருவதை கைவிட வேண்டும்; குத்தகை விவசா யிகளை, குத்தகை உரிமைப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். மாறாக, ஏலம் விடுவது சட்ட விரோதம். வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்களில் இஸ்லாமியர்களிடமும் அபரிமிதமான வாடகை வசூலிக்கப் படுகிறது. மார்க்கெட் மதிப்பில் வாடகை வசூலித்தால் ஏழை - எளிய மக்களால் பணம் செலுத்த முடியாது. பயனாளிகள், அறநிலையத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகா ரிகள் கூட்டாக பேசி வாடகையை நிர்ணயிக்க வேண்டும். அபரிமித மான வாடகையை கைவிட வேண்டும். அடிமனைதான் கோவிலுக்கு சொந்தமே தவிர, அவற்றின் மேல் உள்ள கட்டடங்கள் பயனாளிகள் சொந்தமாக கட்டிக் கொண்டது. ஆனால், கட்டடத்தைக் கூட விற்ப னை செய்ய முடியாத மற்றும் பெயர் மாற்றித்தர முடியாத நிலை உள்ளது. மின் இணைப்பை மாற்ற முடியாத நிலை உள்ளது. ஆகவே, இதனை சரி செய்ய வேண்டும். இவ்வாறு பெ. சண்முகம் கூறி னார்.