tamilnadu

img

பாஜகவின் வஞ்சனையையும் கடந்து தமிழ்நாடு முன்னேறுகிறது

பாஜகவின் வஞ்சனையையும் கடந்து தமிழ்நாடு முன்னேறுகிறது

“ஒன்றிய பாஜக அரசு, வாக்க ளிக்காத தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் நிலையில், அந்த வஞ்சனை யையும் மீறி தமிழ்நாடு வளர்ச்சி யின் முன்னணியில் திகழ்கிறது” என  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா மைதானத் தில் ஞாயிறன்று நடைபெற்ற ‘வள்ளி கும்மி’ கின்னஸ் சாதனை விழாவில் கலந்து கொண்டு உரை யாற்றிய அவர், “இந்த விழா, 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளி கும்மி  நிகழ்ச்சியால் கின்னஸ் சாதனைப் பெற்றது. இதில் கலந்து கொண்டது  மகிழ்ச்சியளிக்கிறது. பெண்கள் என்றாலே சாதனை, சாதனை என் றாலே பெண்கள் தான். எனது ஆட்சி  மகளிருக்கான ஆட்சி என்பதை மக் கள் நன்கறிந்துள்ளனர்” என்றார். மேலும், நடந்து முடிந்த 2024  நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க  40-க்கு 40 வெற்றி பெற்றது, இந்த  ஆட்சிக்கு மக்களிடமிருந்து கிடைத்த நற்சான்றிதழாகும். வர விருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலி லும் தி.மு.க வெற்றிபெறும் என் பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், மோடி  தலைமையிலான ஒன்றிய அரசு,  தமிழ்நாட்டை வாக்களிக்க வில்லை என்பதற்காக நிதி ஒதுக்கீடு களில் தொடர்ந்து புறக்கணித்து  வருகிறது. அந்த வஞ்சனையையும் மீறி தமிழ்நாடு கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வருகிறது. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக் கப்படக்கூடாது என பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் இதுவரை அவரிடமிருந்து பதில் வர வில்லை. தமிழ்நாட்டிற்கு வரும் போது இதை தெளிவுபடுத்த வேண் டும் எனவும் கோரிக்கை வைத்துள் ளேன். இந்த கலை நிகழ்வு தமிழர் பண்பாட்டின் ஒற்றுமையும், சமூக  முன்னேற்றத்தையும் வெளிப்படுத் துகிறது. கலைகள் ஒழுக்கத்திற்கும்  வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில், அமைச்சர் செந்தில்பாலாஜி, கொமதேக தலை வர் ஈஸ்வரன் எம்எல்ஏ உள்ளிட் டோர் பங்கேற்றனர்.