உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
சேலம் அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கப்படுவதை எதிர்த்து அப்பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரி டம் திங்களன்று மனு அளித்த னர். சேலம் மாவட்டம், ராக்கிப் பட்டி அருகே ராஜபாளையம், எட்டி மாணிக்கம்பட்டி உள் ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க குறியீடு செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே கே.ஆர். தோப்பூர் முதல் மல்லூர் வரை உயர் மின் பாதை உள்ள நிலையில், மீண்டும் இப்பகுதியில் கோபுரங்கள் அமைப்பது ஏற்புடைய தல்ல என்கின்றனர் இப்பகுதி மக்கள். மேலும், இப்பகுதியில் அதிக விளை நிலங்கள், 1000க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் அடுக்குமாடி வீடுகள் உள்ளதால், மின் கோபுரங்கள் அமைந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும், எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உயர் மின்னழுத்த கோபுரங்களை மாற்றுப் பாதை யில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத் துள்ளனர்.