tamilnadu

img

குரு தேஜ் பகதூர் தியாக விழாவில் தமிழ்நாடு அரசு பங்கேற்பு

குரு தேஜ் பகதூர் தியாக விழாவில் தமிழ்நாடு அரசு பங்கேற்பு

சென்னை: ஒன்பதாவது சீக்கிய குரு ஸ்ரீகுரு தேஜ் பகதூரின் உயர்ந்த தியாகத்தின் 350 ஆவது ஆண்டு விழா வில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்குமாறு பஞ்சாப் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எஸ்.ஹர்பஜன் சிங்  மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பிரேந்தர் குமார் கோயல்  ஆகியோர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு  அரசின் சார்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோரை இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதனடிப்படையில், ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நடை பெற்ற விழாவில் கலந்து கொண்டு, தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய வாழ்த்துக் கடிதம் மற்றும் நினைவுப் பரிசினை பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானிடம் வழங்கினர். அந்த வாழ்த்துக் கடிதத்தில், “விழா மிகச் சிறப்பாக நடை பெற தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, குரு தேக் பகதூரின் நிலைநாட்டிய துணிச்சல்,  கருணை மற்றும் மதச் சுதந்திரம் ஆகிய உன்னத இலட்சியங் களுக்கு தனது மரியாதையை” தெரிவித்துள்ளார்.