சிபிஎம் அகில இந்திய மாநாடு தமிழக முதல்வர் பங்கேற்கிறார் நேரில் அழைப்பிதழ் வழங்கி பெ. சண்முகம் பேட்டி
மதுரை மாநகரில் வருகிற ஏப்ரல் 2 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி நடைபெறும் ‘மாநில உரிமைகள் பாதுகாப்பு’ குறித்த கருத்த ரங்கில் கேரள முதல்வருடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரை யாற்றுகிறார் என்று மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சட்ட மன்ற உறுப்பினர்கள் வி.பி. நாகை மாலி, எம். சின்னதுரை ஆகியோருடன் வியாழக் கிழமை (மார்ச் 27) அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலக வளா கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது வருமாறு: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை மதுரையில் கோலாகலமாக நடைபெறு கிறது. இந்த மாநாட்டையொட்டி, ஏப்ரல் 3-ஆம் தேதி ‘மாநில உரிமைகள் பாது காப்பு’ குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடை பெறுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக மாநிலத்தின் வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா ஆகிய மூவரும் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகின்றனர். இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வ தற்கான அழைப்பிதழை கட்சியின் சார்பில் முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கி னோம். அவரும் கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார்”, என்றார். மாநிலங்கள் மீது பாஜக தாக்குதல் “இந்தக் கருத்தரங்கம் நிச்சயம், இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏன் என்று சொன்னால், ஒன்றியத்தில் உள்ள பாஜக அரசாங்கம்,
பாஜக அல்லாத மாநில அரசாங்கள் மீது கொடூரமான தாக்குதல்களை தொடர்ந்து தொடுத்து வருகிறது. மாநிலங்க ளுக்கு நமது அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அதிகாரங்களை பறிப்பது, நிதி வழங்குவதில் பார பட்சம், கல்விக்கு நிதி ஒதுக்காமல் பிளாக் மெயில் செய்வது, இயற்கை பேரிடர் நிதி தராமல் வஞ்சிப்பது என்று பல்வேறு வகைகளிலும் நிதி ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை கொடுப்பதை பாஜக அரசாங்கம் வழக்க மாக கொண்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மதுரை யில் நடைபெறும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் இந்த கருத்தரங்கம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தாகும்” என்றும் பெ. சண்முகம் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல்
ஒன்றிய அரசு கொண்டு வரும் வக்பு வாரிய திருத்தத் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று முதல மைச்சரால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப் பட்ட அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில், அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம் என்று கூறிய பெ. சண்முகம், “தொடர்ச்சியாக இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை, வெறுப்பு நடவ டிக்கைகளை ஒன்றிய பாஜக அரசாங்கம் எடுத்து வரு வதை அடுக்கடுக்கான சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில், இஸ்லா மிய மக்களின் உரிமைகளை பறிக்கக் கூடிய வக்பு வாரிய திருத்தத் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது” என்றார். அரசு ஊழியர் - ஆசிரியர்க்கான பழைய ஓய்வூதியம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “சிபிஎம் அகில இந்திய மாநாட்டிற்கு முதல்வரை அழைப்பதற்காகத் தான் இன்று சந்தித்தோம். அரசு ஊழியர் மற்றும் ஆசிரி யர்களுக்கான பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது குறித்து வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்துவோம்” என்று பெ. சண்முகம் தெரிவித்தார். சிபிஎம் சட்டமன்ற கட்சித் தலைவர் வி.பி. நாகை மாலி, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் உடனிருந்தனர்.