tamilnadu

img

பெண் அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜன.2- பெண் அடிமை என்ற நிலையில்  இருந்து பெண் அதிகாரம் என்னும்  மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை யில் மகளிர் திறன் மேம்பாடு மைய த்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து  வைத்தார். இந்த மையத்தின் மூலம்  18 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் வேலைவாய்ப்பு, சுய  தொழில் செய்வதற்கு இந்த மையம்  உதவும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:  பெண்கள் கல்வி அறிவை பெற  வேண்டும் என்பதன் அடுத்த கட்ட மாக, பெண்களின் உயர்கல்வியை  உறுதி செய்யும் விதமான திட்டங்  களை உறுதி செய்து வருகிறோம். விடியல் பயணத் திட்டம், புது மைப் பெண் திட்டம், தோழி விடுதி  உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. பெண்கள், அதிகாரம், உலக அறிவை பெற வேண்டும் என்ப தற்காகத்தான் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரு கிறோம். பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகமே உயர்ந்து நிற்  கும். பெண் அடிமை என்ற நிலையில் இருந்து பெண் அதிகாரம் என்  னும் மாற்றத்தை நோக்கி சென்று  கொண்டிருக்கிறோம். கொளத்தூ ரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி எனும் பெயரில் திட்டத்தை தொட ங்கி, பெண்களுக்கு திறன் மேம்பாட்டு வளர்ச்சி பணிகளை கொடுத்து வருகிறோம்,  இவ்வாறு அவர் கூறினார்.