tamilnadu

img

தமிழ்நாட்டின் கல்வி முறை நாட்டிற்கே முன்மாதிரியானது!

தமிழ்நாட்டின் கல்வி முறை நாட்டிற்கே முன்மாதிரியானது!\

ஒன்றிய அரசுக்கு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பதில்

திமுகவின் எம்.பி.க்  களும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பிஎம் ஸ்ரீ  பள்ளிகளை நிறுவ  ஒப்புதல் அளித்து விட்டு, தற்போது நாடா ளுமன்றத்தை நான் தவ றாக வழிநடத்துவதாகக் குற்றம் சாட்டு கின்றனர்” என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தமிழ்  நாடு பள்ளிக்கல்வித்துறை 2024 மார்ச் 15  வெளியிட்ட கடிதத்தையும் அவர் ஆதார மாக பதிவேற்றியிருந்தார். இதற்கு உடனடியாக பதிலளித்த தமி ழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “ஒன்றிய அமைச்சராக  இருக்கும் ஒருவரே, தவறான தகவல்க ளைப் பரப்புவதன் மூலம் உண்மையை மாற்ற முடியாது; தமிழ்நாடு ஆரம்பம் முதலே தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்துதான் வருகிறது; தேசிய கல்விக் கொள்கையை (NEP - 2020) எதிர்த்து வரு கிறது; எங்களது ‘நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்’ ஒன்றும் இல்லை; 2024 மார்ச் 15  அன்றைய கடிதத்தில் கூட, தேசிய கல்விக்  கொள்கையை ஏற்பதாகக் கூறவில்லை. ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அக்குழு வின் பரிந்துரைப்படி, திட்டத்தை செயல் படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக ‘எக்ஸ்’ பதிவிட்டிருக்கும் அவர், “தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) ஆனது,  மொழிப்பிரச்சனையில் தமிழ்நாட்டின் நிலைபாடு மீதான தாக்குதல் என்ப தோடு, தவறாக வழிநடத்துவது மட்டுமல் லாது ஒரு மிகப்பெரிய உண்மையை- பல  பத்தாண்டுகளாக முயற்சி மற்றும் சோதனை செய்யப்பட்டு, வெற்றிகரமா னது என நிரூபிக்கப்பட்ட - இந்தியாவிலும், வெளிநாட்டிலும் தொழில் துறைகளில் சிறந்து விளங்க மாணவர்களுக்கு தலை முறை தலைமுறையாக வாய்ப்பை அளித்து  வரும் தமிழ்நாடு மாநில வாரியக் கல்வி (State Board) முறையை முற்றிலுமாக புறக்கணிக்கிறது” என்று கூறியுள்ளார். மிகச்சிறந்த விஞ்ஞானிகள், தொழில் முனைவோரை உருவாக்கியுள்ளோம் என்  றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.