tamilnadu

img

யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி  யஷ்வந்த் வர்மா வீட்டில், கடந்த மார்ச் 14 அன்று நள்ளிரவு தீ  விபத்து ஏற்பட்டதாகவும், அப் போது, அங்கு மூட்டைகளில் பாதி  எரிந்த நிலையில், கட்டுக்கட்டா கப் பணம் கண்டுபிடிக்கப்பட்ட தாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்தப் பணம் தனக்குச் சொந்தமானது அல்ல என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா, தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் விளக்கம் அளித் துள்ள நிலையில், அவர் பணி யிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு  உள்ளார். இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியைக் கலந் தாலோசிக்காமல் உயர் நீதி மன்ற நீதிபதி மீது எந்த குற்ற வியல் வழக்கும் பதிவு செய்ய முடியாது என்ற 1991 தீர்ப்பை எதிர்த்தும், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யவும், இந்த வழக்கை தில்லி காவல்துறை விசாரிக்க வும் உத்தரவிட வேண்டும் என்று  கோரி உச்ச நீதிமன்ற மூத்த  வழக்கறிஞர்கள் வாய்மொழி யாக புதனன்று முறையிட்டனர். இதனை ஏற்றுக்கொள்ளாத உச்ச நீதிமன்றத் தலைமை நீதி பதி சஞ்சீவ் கன்னா, அவசர மாக இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்றும் மனுவாகத் தாக்கல் செய்தால் உரிய நேரத்  தில் கண்டிப்பாக விசாரிக்கப் படும் என்று கூறியுள்ளார். ஏற்கெ னவே, இந்தச் சம்பவம் தொடர்  பாக 3 உயர்நீதிமன்ற நீதிபதி கள் கொண்ட அமர்வு விசாரணை  செய்து வருவது குறிப்பிடத் தக்கது.