சு.வெங்கடேசன் எம்.பி.யின் தந்தை இரா.சுப்புராம் மறைவு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரு மான சு. வெங்கடேசனின் தந்தை இரா. சுப்புராம், வெள்ளிக் கிழமையன்று காலமானார். அவருக்கு வயது (79). இந்நிலையில், இரா. சுப்புராம் மறைவுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். “சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்க டேசன் எம்.பி.யின் தந்தை இரா. சுப்புராம் மறைவிற்கு சிபிஐ(எம்) மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தந்தையை பிரிந்து வாடும் சு. வெங்கடேசன் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரி வித்துக் கொள்கிறோம்” என்று பெ. சண்முகம் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் இரங்கல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பி னர் சு.வெங்கடேசன் தந்தை சுப்புராம் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஆளாக்கிய தந்தையை இழந்து வாடும் வெங்கடேசனுக்கும் அவரது குடும்பத் தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறேன்”என்று கூறியுள்ளார்.