tamilnadu

img

இளம் வழக்கறிஞர்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.15 ஆயிரமாக வழங்குக!

திருச்சிராப்பள்ளி, செப்.17 - இந்திய மாணவர் சங்கத்தின் சட்டக் கல்லூரி மாணவர்கள் மாநில மாநாடு திருச்சியில் சனிக்கிழமை நடந்தது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் சம்சீர்அகமது தலைமை வகித்தார். அகில இந்திய வழக்கறிஞர் சங்க  மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார்  துவக்க உரையாற்றினார். சட்டக் கல்லூரி வரலாறு மற்றும் மாணவர் சங்க  போராட்டம் குறித்து உயர்நீதிமன்ற வழக் கறிஞர் திருமூர்த்தி, சங்க மத்திய குழு உறுப்பினர் மிருதுளா ஆகியோர் பேசினர். எதிர்கால செயல்பாடுகள் குறித்து  மாநில இணைச் செயலாளர் ஜி.கே. மோகன் பேசினார். தனியார் சட்டக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சீர்மிகு பள்ளிகளை அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இடமாற்றத்தை ரத்து செய்து, மீண்டும் உயர்நீதிமன்ற வளா கத்திலேயே செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து சட்டக் கல்லூரியிலும் மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.15 ஆயிரமாக வழங்க வேண்டும்.  மாதிரி நீதிமன்ற போட்டிகள் மற்றும்  அதற்கான வசதிகளை (கட்டடம் உள்ளிட்டு) அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் உருவாக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்தின் வேலைகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி, உள்விளையாட்டு அரங்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநிலச் செயலாளர் அரவிந்தசாமி நிறைவுரை ஆற்றினார். திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் சூர்யா நன்றி கூறினார்.