tamilnadu

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும்... 1ஆம் பக்கத் தொடர்ச்சி

தமிழக அரசு,சில கட்டங்களில் தனிமைப்படுத்துவதற்கான கட்டமைப்புகள் இல்லையென காரணத்தை கூறி விமானத்தை இயக்கவேண்டாம் என்று தெரிவித்தது. வந்தே பாரத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முதல் பகுதியில் ஒரு விமானம் கூட தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை.

‘பகல் கொள்ளை’ கட்டண வசூல்
வந்தேபாரத் விமானங்கள் இல்லாத போதும் தமிழ் மக்கள்,தங்கள் பகுதியில் இயங்கும் தமிழ்ச்சங்கங்கள் மூலமும், சில நிறுவனங்களின் மூலமும் அவர்களாகவே ஒன்றிணைந்துதனி விமானத்தை பிடித்து தமிழகம் வந்தால் அவர்களிடம் தமிழக அரசு நடந்து கொள்ளும்விதம் “பகல் கொள்ளை” போல்உள்ளது. நோய் தொற்றிலிருந்து தப்பித்து சொந்த மண்ணிற்குவந்தால் போதும் என்று தங்களின் சேமிப்புகள் அனைத்தையும்இழந்து, கடன் வாங்கி விமானத்தில் தமிழகம் வந்தால், சோதனைக்கும், தனிமை படுத்துதலுக்கும் தமிழக அரசு வசூலிக்கும் கட்டணம் நபர் ஒன்றுக்கு இருபத்தி ஐயாயிரம் அளவுக்கு இருக்கிறது. இதே நேரத்தில் கேரள அரசு, அவர்கள் வந்தே பாரத் மூலமாக வந்தாலும், அவர்களாகவே விமானத்தை பதிவு செய்துவந்தாலும் அனைவரையும் ஒரே மாதிரிதான் கையாளுகிறது, அனைவருக்கும் ஒரே விதிதான்.கொரோனா காலத்தில் உலகெங்கும் வசிக்கும் தமிழர்கள்கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். தங்களின் தாயகம்திரும்ப நினைக்கும் அவர்களின் முயற்சிக்கு ஆதரவாக மத்தியஅரசுமில்லை, மாநில அரசுமில்லை.

அரசுக்கு வேண்டுகோள்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு நாளும்எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. கர்ப்பிணிகள், வயோதிகர்கள், இறப்பு வீட்டுக்கு வரவேண்டியவர்கள், விசா முடிந்தவர்கள், வேலையிழந்தவர்கள் என எல்லோரின் குரலும் விடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகஅரசு உடனடியாக இந்த விசயத்தில் அக்கறை மிகுந்த தலையீட்டினை செய்ய, தனி சிறப்பு அதிகாரியை நியமித்துமத்திய அரசை நிர்ப்பந்தித்து, துடிப்போடு செயல்பட்டால்மட்டுமே துயரத்தில் வாழும் தமிழர்களுக்கு நியாயம் வழங்கமுடியும். வந்தே பாரத் விமானங்களின் வழியாக வந்தாலும், தனித்த ஏற்பாட்டில் வந்தாலும் அனைவரையும் ஒன்று போல் நடத்தும் முடிவை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.