விருதுநகர், மே.22- மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதைக் கண்டித்தும், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தியதைக் கண்டித்தும் சிஐடியு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் 81 இடங்களில் இப்போராட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, மாவட்ட பொருளாளர் வி.ஆர்.செல்லச்சாமி, மாவட்ட நிர்வாகிகள், எம்.அசோகன், ஜி.வேலுச்சாமி, ஆர்.பாலசுப்பிரமணியன், பி.ராமர், எம்.சாராள், எம்.வெள்ளைத்துரை, எம்.கார்மேகம், ஆர்.எம்.மாரியப்பன், எம்.திருமலை, சாரதாபாய் உட்பட 1100 தொழிலாளர்கள் பங்கேற்றனர்.