இந்தி திணிப்பு, தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக மே 1, 2, 3 திண்டுக்கல்லில் மாநில மாநாடுதமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு
மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் லில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசி ரியர் கூட்டணியின் சார்பாக இந்தி திணிப்பு, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில மாநாடு நடைபெற உள்ளது என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.மயில் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தை யொட்டி, செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: வாழ்வாதார உரிமை மீட்க, 20 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7 ஆவது மாநில மாநாடு திண்டுக்கல்லில் மே 1, 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. “அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம்! இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம்! பறிக்கப்பட்ட வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுப்போம்!” எனும் கொள்கை முழக் கத்துடன் இம்மாநாடு நடைபெறுகிறது. மே 1, 2 ஆகிய தேதிகளில் பிரதிநிதிகள் மாநாடும், மே 3 அன்று பெண் ஆசிரி யர்கள் மாநாடும் நடைபெறுகிறது.
பிற்பக லில் இம்மாநாட்டில் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் பேரணியும் நடைபெற உள்ளது. மாநாட்டில் தொழிற் சங்க தலைவர்கள், கல்வியாளர்கள், தோழமைச் சங்கத் தலைவர்கள், அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் தலை வர்கள் பங்கேற்க உள்ளனர். ஒருங்கிணைந்த ஓய்வூதியத்தை ஏற்கவில்லை. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து, ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். பதவி உயர்வை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பறிக்கப்பட்ட சரண் விடுப்பு ஊதியம், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 விழுக்காட் டிற்கும் மேலான ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண்.243-ஐ ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் ஆண்டு தோறும் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரி யர்கள் பணி ஓய்வு பெறுகிறார்கள். கடந்த 11 ஆண்டுகளாக இத்துறையில் ஒரு நிரந்தர ஆசிரியரைக் கூட நியமிக்க வில்லை. காலிப் பணியிடங்களை நிரப்பி மாணவர்களின் கல்வித் தரத்தை பாது காக்க முன்வர வேண்டும். இவ்வாறு ச.மயில் கூறினார். பேட்டியின்போது மாநிலத் தலைவர் மு.மணிமேகலை, மாநிலப் பொருளாளர் தா.கணேசன், துணைப் பொதுச் செயலா ளர் முருகன், எஸ்.டி.எப்,ஐ. பொதுக் குழு உறுப்பினர்கள் டேவிட்ராஜன், சுதா, திண்டுக்கல மாவட்டத் தலைவர் ஜான் வில்சன், மாவட்டச் செயலாளர் முருகன், பொருளாளர் எஸ்தர் லதா, மாநில செயற் குழு உறுப்பினர்கள் பாண்டியன், எம்.கணேசன் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.