tamilnadu

கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா

கும்பகோணம் அரசினர் மகளிர்  கல்லூரியில் விளையாட்டு விழா 

கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 62 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் பா. பிரமிளா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவருமான சாக்கோட்டை க .அன்பழகன் கலந்துகொண்டு மாணவிகள் அளித்த அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டு, ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைத்து, விளையாட்டுத் துறையில் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழை வழங்கினார். இவ்விழாவில் எழில், ஃபாத்திமா, ஜெ பிரியதர்ஷினி, ரா.வித்யாஸ்ரீ, எஸ்.எஸ். விஜயலட்சுமி, ஆர்.ரேணுகாதேவி, க. சந்திரலேகா மற்றும் மாணவிகள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் சங்க  புதிய பொறுப்பாளர்கள் தேர்வு 

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் முள்ளங்குடி கிராமத்தில்  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கம் சார்பில், கிளை மாநாடு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது கிளை மாநாட்டில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  முள்ளங்குடி கிராம கிளைத் தலைவராக பிரபாகரன், செயலாளராக சண்முகம், பொருளாளராக ரேவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  கூட்டத்தில் வரும் 22 ஆம் தேதி, சென்னையில் நடைபெறவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை கோரிக்கை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில், கிளை சார்பில் அனைவரும் பங்கேற்பது என தீர்மாணிக்கப்பட்டது.