இந்திய நாட்டிற்கு சோசலிசமே மாற்று
கடலூர் கருத்தரங்கில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு
இந்திய நாட்டிற்கு சோசலிசமே மாற்று’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், கடலூரில் முழங்கி னார். மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெறவுள்ள கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, கடலூ ரில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘இந்தி யாவின் சமூக முன்னேற்றத்திற்கு சோச லிசமே மாற்று’ என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது வருமாறு: தமிழ் மொழியைக் காக்கும் போராட் டத்திற்கு யார் யாரோ உரிமை கொண்டா டுகிறார்கள். யார் யாரோ பேசுகிறார்கள். தமிழ்நாடு மாநிலம் அமைய வேண்டும் என்பதற்காக களம் கண்ட இயக்கம் என்று சொன்னால் அது செங்கொடி இயக்கம் தான். கம்யூனிஸ்ட் இயக்கம் அன்று போராடாமல் இருந்திருந்தால், மொழி அடிப்படையிலான மாநிலமே அமைந்திருக்காது. 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று தமிழ்நாடு மாநிலம் அமைந்தது என்று சொன்னால், அதற்காக போராடியது மட்டுமல்ல, காவல்துறையின் அடக்குமுறையை மீறிச் சிறை சென்றவர்கள் செங்கொடி இயக்கத்தினர். சட்டமன்றத்தில் முதலில் தமிழில் பேசியவர் பி.ஆர்… 1952-ஆம் ஆண்டு சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக இருந்த தோழர் பி. ராமமூர்த்தி தான், சட்டமன்ற வர லாற்றில் முதன்முதலில் தமிழில் பேசி னார். 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக பங்கேற்கவில்லை. 1957-இல் தான் தேர்தலுக்கு வந்தார் கள். இந்த 5 ஆண்டு காலத்தில் தாய் மொழி தமிழ்தான் தமிழகத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ப தற்கு எண்ணற்ற வாதங்களை எடுத்து வைத்து வாதாடிய தோழர்கள் பி. ராம மூர்த்தி, ஜீவா என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பண்பாட்டு உரிமைக்காக போராடியது கம்யூனிஸ்டுகள் பண்பாட்டைப் பற்றி கம்யூனிஸ்டு கள் கவலைப்படாதவர்கள், அவர்கள் பொருளாதார கோரிக்கைகளுக்கு தான் போராடுவார்கள் என்று பலர் விமர் சித்தார்கள். கம்யூனிஸ்டுகளை விட பண்பாட்டுக்காக களத்தில் நின்று போராடியவர்கள் தமிழகத்தில் வேறு யாரும் கிடையாது, மொழி உரிமைக் காக போராடியவர்களும் வேறு யாரும் கிடையாது. தமிழ் ஆட்சி மொழியாக இல்லை, அரசு மொழியாக இல்லை, பயிற்று மொழியாக இல்லை, நீதி மன்றம் மொழியாகவும் இல்லை. மேடையில் பேசுகின்ற மொழியாக, சங்க இலக்கியங்கள் பாடுகின்ற மொழி யாக மட்டுமே இருந்தால் தமிழ் வாழாது. அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் வேண்டும் இந்தித் திணிப்புக்கு எதிராக, தமிழை முன்வைக்க வேண்டுமே தவிர தமிழுக்கு மாற்றாக ஆங்கிலத்தை வைக்கின்ற அநீதி தமிழ்நாட்டில் நடந்து விட்டது. இன்று இரு மொழிக் கொள்கை இருக்கிறது. தாய்மொழி தான் ஒரு மனிதனின் சிந்தனைக்கு அடிப்படை தேவையாகும். பாஜகவினரோ, இந்தி மொழியைத் திணித்தே தீர்வேன் என்று அடம்பிடிக்கின்றனர். இந்திய அரசியல மைப்புச் சட்டத்தில் 341 முதல் 351- ஆவது பிரிவு வரை மொழி சம்பந்தமாக சில ஷரத்துக்கள் உள்ளன. அந்த சட்டத்தில் நாட்டில் இந்தி தான் ஆட்சி மொழி, அலுவல் மொழியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தித் திணிப்பு என்பது முற்றாக ஒழிக்கப்பட வேண்டுமானால், அரசி யல் சட்டத்தில் உருப்படியான திருத்தங் களை கொண்டு வருவதன் மூலமா கத்தான் ஒழிக்க முடியும். அத்தகைய மகத்தான பணியை நாம் செய்ய வேண்டும். சோசலிசத்தின் சாதனைகள் சோசலிசத்தின் சாதனைகள் என்ன என்பதை புரிந்து கொண்டால் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும், சோச லிசத்தில் தீர்வு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். 1917-ஆம் ஆண்டு சோவியத் நாட்டில் ஜார் மன் னனைத் தூக்கி எறிந்து செங்கொடியின் கீழ் சோசலிஸ்ட் அரசு நிறுவப்பட்டது. இந்தியா தொழில் வளம் மிக்க நாடாக மாற வேண்டும் என்று, பிரதம ராக இருந்த நேரு கூறினார். அன்றைய வல்லரசுகளாக இருந்த பிரிட்டிஷ் அரசும், அமெரிக்க அரசும் இந்தியா விற்கு எந்த வகையிலும் உதவி செய்ய முன்வரவில்லை.
இந்நிலையில் தான் நேரு, சோவியத் ரஷ்யாவின் உதவி யைக் கோரினார். அதனை ஏற்று இந்திய நாட்டின் தொழில் வளத்தைப் பெருக்க சோசலிச சோவியத் யூனியன் முன் வந்தது. இந்தியாவுக்கு அளித்த கொடைகள் இன்று நெய்வேலி என்எல்சி நிறு வனம் இயங்குகிறது என்று சொன்னால் சோவியத் நாட்டின் உதவி தான் கார ணம். ரூர்கேலா, பிலாயில் அமைந் துள்ள இரும்பு தொழிற்சாலை, பக்ரா நங்கலில் அமைந்துள்ள அணைக்கட்டு, புனல் மின்சாரம் இந்த மகத்தான தொழிற்சாலைகள் எல்லாம் சோசலிச சோவியத் யூனியன் இந்தியாவுக்கு அளித்த கொடைகள்.
உதவாத ஏகாதிபத்தியம் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி யில் இருந்து இதுபோன்ற உதவிகள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளதாக கூற முடியுமா? ஏகாதிபத்தியத்திற்கும் சோச லிச சோவியத் யூனியனுக்குமான வித்தி யாசத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். சோவியத் கட்டமைப்பு குலைந்து ஏற்பட்ட இழப்பு சோவியத் நாடுகளுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் இல்லை. மூன்றாம் உலக நாடுகள் அனைத்திற்கும் இழப்புதான். சோசலிச சமூகம் தான் மனிதனை வாழ வைக்கின்ற சமூகமாக இருந்திருக்கிறது. சாதனைகள் படைக்கும் சோசலிச மக்கள் சீனம் 140 கோடி மக்களைக் கொண்ட சீன நாடு, 1949-இல் விடுதலை அடைந்தது. சீனாவில் செங்கொடி ஆட்சி ஏற்பட் டது. இந்த 75 ஆண்டுகளில், அமெ ரிக்க ஏகாதிபத்தியமே மண்டியிடக் கூடிய அளவிற்கு, சோசலிசத்தை கடைப்பிடிக்கும் சீனா கம்பீரமாக வளர்ந்துள்ளது. என்றைக்காவது அந் நிய நாடுகளிடம் சீனா கையேந்தி யுள்ளதா?தொழில்நுட்பம் என்று சொன்னால், ஏஐ என்கின்ற தொழில்நுட்பத்தை அமெரிக்கா வெளியிட்டால் அதைவிட சக்தி வாய்ந்த டீப்சீக் என்ற தொழில்நுட்பத்தை தயாரித்து வெளி யிடுகிறது சீனா. அமெரிக்காவை எல்லாவிதத்தி லும் நேருக்கு நேர் சந்திக்கிற பொருளாதார வல்லமை சீனாவிடம் உள்ளது. அமெரிக்க அரசாங்கம் கடைப்பிடித்த நவீன தாராளமய கொள்கை இன்று தவிடு பொடி ஆகிவிட்டது. அதன் எல்லா முயற்சிகளும் நாசமாகப் போய் விட்டது. தன்னை பாதுகாத்துக் கொள்வது என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த கொள்கையும் அவர்களிடம் இல்லை.
அமெரிக்காவுக்கே சிம்ம சொப்பனமான கியூபா
அமெரிக்கா அருகே உள்ள சிறிய நாடு கியூபா. 50 ஆண்டுகளுக்கு மேலாக பொருளாதா ரத் தடை உள்ளிட்ட ஏராளமான நெருக்கடிகளை கொடுத்து, கியூபாவை மிரட்டிப் பணிய வைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. பட்டினி கிடந்து போராடுவோமே, தவிர ஒருபோதும் அமெரிக்கா விற்கு அடிபணிய மாட்டோம் என்று கூறி சிம்ம சொப்பனமாக கியூபா திகழ்ந்து வருகிறது. அதற்கு அங்கு உள்ள சோசலிஸ்ட் அமைப்பு தான் காரணம்.
உலகம் முழுவதும் சோசலிசக் கொடி
சோவியத் நாடுகளிலேயே மார்க்சியமும் - லெனினியமும் தான், இனவாத, மதவாதப் பிரச்ச னைகளுக்கு சரியான தீர்வை சொன்னது. இந்தி யாவில் சாதிய பிரச்சனை, மதப் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது. இந்நிலையில் சோசலிசம் இந்தியாவில் அமைகிறபோது தான் இன்றைக்கு இருக்கிற நெருக்கடி தீரும். இன்று இல்லாவிட்டா லும் என்றைக்காவது ஒரு நாள் உலகம் முழு வதும் சோசலிசக் கொடிதான் பறக்கும். இது சமூக விஞ்ஞானம்.
சோசலிசம் அமைந்தே தீரும்
மனிதசமூக வரலாற்றைப் புரட்டிப் பார்க்கிற போது, ஒரு காலத்தில் சோசலிசம் என்பதும், கம்யூனிச சமூகம் என்பதும் அமைக்கப்பட்டே தீரும் என்று தான் வரலாறு கூறுகிறது. மனி தனின் அடிப்படைத் தேவையே பொருள் உற்பத்தி தான். பொருள் உற்பத்தி இல்லை என்றால் மனித சமூகமே இருக்காது என்று மார்க்ஸ் ஆய்வு செய்து சொன்னார். நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த உணவு உற்பத்தியை விட தற்போது உணவு உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பி னும் அன்றும் பசியிலும் பட்டினியில் இறந்தனர். இன்றும் இறக்கின்றனர். உணவு உற்பத்தி அதி கரிக்கின்ற போதும் மக்களின் பசி - பட்டினி குறையவில்லை. உற்பத்தியை முதலாளிகள் கைப்பற்றிக் கொள்கின்றனர். அதனால் தான் முதலாளிகள் மேலும் வளர்கிறார்கள். ஏழை ஏழையாகவே இருக்கின்றனர். உலக முழுவ தும் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 24 மணி நேரத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைப்பதாக ஆய்வு சொல்கிறது.
மார்க்ஸ் கணிப்பு
உழைப்பவர்களுக்கு உழைப்பின் பலன் திரும்பிக் கிடைக்கின்ற லட்சியம் நிறைவேறும் போது, நாட்டில் வறுமை இருக்காது, பஞ்சம் இருக்காது, பசி, பட்டினி இருக்காது என்று மார்க்ஸ் சொல்லி இருக்கிறார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வறுமைக்கோடு பட்டியல் கணக்கு வெளியிடப்படவில்லை. ஏழைகளின் வறு மையை ஒழிப்பதற்கு மாறாக, ஏழைகளின் வறுமைப் பட்டியல் கணக்குகளை ஒழித்து விட்டார். தொழில்நுட்பங்களை மக்கள் நல னுக்காக பயன்படுத்துவது சோசலிச நாடு கள், லாப வெறிக்காக பயன்படுத்துவது முத லாளித்துவ நாடுகள்.
சோசலிசப் பாதையில் இட்டுச் செல்வோம
இன்று இருக்கின்ற முதலாளித்துவ அமைப்புக்கு மாற்றாக இடதுசாரி மாற்று அரசை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும். தமிழ் நாட்டில் வலிமையான இயக்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட வேண்டும். இவை அனைத்திற்கும் உண்மையான மாற்று சோசலி சம் தான் என்று தீர்மானத்தை முன்மொழிந்துள் ளோம். எவ்வளவு பொருளாதார கோரிக்கைக ளைப் போராடி வெற்றி பெற்றாலும், சோசலி சம் சமூகம் அமைகின்ற போது தான் உண்மை யான மாற்று அரசியலுக்கான பலனை அடைய முடியும். அனைத்தும் கிடைக்கும் என்று மக்க ளுக்கு படிப்படியாக புரிய வைக்க வேண்டி உள்ளது. சோசலிசத்தை பொதுவாக பேசுவது ஒன்று, அதை அடைவதற்கான வழி இன்னொன்று, அதை அடைவதற்கான வழியை மார்க்சிஸ்டுகள் மக்களுக்கு காட்ட வேண்டும். அந்த வழியில் இந்திய நாட்டு மக்களை திரட்டி மகத்தான கடமையை நிறைவேற்றுவோம்.