கட்டாயத் திருமணத்தால் சிறுமி தற்கொலை
தாய் உட்பட 2 பேர் போக்சோவில் கைது
பென்னாகரம் அருகே கட்டாயம் திரும ணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரது தாய், கணவர் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 17 வய தில் மகளும், 16 வயதில் மகனும் உள்ளனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறு பாட்டில், மனைவி தனியாக வாழ்ந்து வருகி றார். இந்நிலையில், கடந்த மார்ச் 10 ஆம் தேதி யன்று தனது மகளை, மாரண்டஅள்ளி அருகே உள்ள தேக்லான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் (29) என்பவருக்கு கட் டாயத் திருமணம் செய்து வைத்துள்ளார். இத னால் விரக்தியடைந்த 17 வயது சிறுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வா ளர் வீரம்மாள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக தருமபுரி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர் பாக சிறுமியின் தாய், கணவர் தாமோதரன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.