சிவகங்கை மன்னர் கல்லூரி பேராசிரியருக்கு வீட்டு நூலக விருது
சிவகங்கை மன்னர் கல் லூரி கௌரவ விரிவுரையா ளரும், பேராசிரியருமான முனை வர் தங்கமுனியாண்டி 16,000க்கு மேற்பட்ட புத்த கங்கள் அடங்கிய வீட்டு நூல கம் அமைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில், சிவ கங்கை மாவட்டத்தில் சிறந்த வீட்டு நூலக விருது மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் வழங்கினார். இதுகுறித்து முனைவர் தங்கமுனியாண்டி கூறுகை யில், வீட்டு நூலகம் கடந்த 16 ஆண்டு காலமாக பராமரித்து வருகிறேன். 16,000 முதல் 18 ஆயிரம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளது. மேலும் ஓலை சுவடி நூல்களும் உள் ளது. இவற்றை மாணவர் களும், பேராசிரியர்களும் பயன்படுத்தி வருகிறார் கள். இந்த நூலகத்தை பயன் படுத்தி 8 பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ள னர். ‘உலகமய சூழலில் தமிழ் நவீன கவிதைகள் அர சியல் வெளிப்பாடு’ என் கிற தலைப்பில் ஆய்வு மேற் கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். வீட்டு நூலகங்களை சிறப்பாக பரா மரித்து வருகிறவர்களுக்கு தமிழக அரசு விருது வழங்க அறிவுறுத்திருந்தனர். அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட பொது நூலகத் துறை ஒரு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த முறை யில் வீட்டு நூலகம் அமைத்து பராமரித்து வருவதை பாரா ட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் விருது வழங்கியுள்ளார் என்றார். இவர் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் - கலை ஞர்கள் சங்க மாவட்டத் தலை வர் பொறுப்பு வகித்து வரு கிறார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.