tamilnadu

img

தமிழ்நாட்டின் மனநல சுகாதார முயற்சிகள் - - ஓர் ஆய்வு -

தமிழ்நாட்டின் மனநல சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க முன் னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சென்னை யில் 200 ஆண்டுகள் பழமையான மன நல மருத்துவமனை செயல்பட்டு வரு கிறது. இதன் நிலையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. மாநில அரசு “மாநிலமே பொறுப்பு” என்ற கொள்கையின் அடிப்படையில் பல் வேறு முன்னெடுப்புகளை மேற் கொண்டுள்ளது. தற்போது மாநிலம் முழு வதும் பத்து மனநல சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. அறுநூற்றுக்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் மன நல சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. ஒவ் வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மனநல மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்புக் கவனம்

மாவட்ட மனநல திட்டம் (DMHP) மிகவும் பயனுள்ள திட்டமாக செயல்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இலவச மருந்துகள், ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தொலை தூரப் பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களின் மனநல னுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படு கிறது. நீட் தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு மனநல விழிப்புணர்வு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பெற் றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது.

மனிதவளம்

மனிதவள பலத்தைப் பொறுத்தவரை, மொத்தம் 884 பணியாளர்கள் பணியாற்று கின்றனர். இதில் 193 மருத்துவர்கள், 45 மனநல வல்லுநர்கள், 646 துணை மருத்துவப் பணியாளர்கள் அடங்குவர். ஆண்டுக்கு சுமார் 6.64 லட்சம் நோயா ளிகள் சிகிச்சை பெறுகின்றனர். 2,400 குடும்பங்களுக்கு தொடர் கவனிப்பு அளிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு நோயாளி 17 நாட்கள் சிகிச்சை பெறுகிறார். இத்தனை பரந்த சேவைகளுக்கும் ஆண்டுக்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்படு கிறது. கட்டமைப்பு மேம்பாடு, ஆராய்ச்சி, பயிற்சி ஆகியவற்றிற்கு கூடுதல் நிதி வழங்கப்படுகிறது. ஐஎஸ்ஓ (ISO) தரச் சான்றிதழ் பெற்ற சிகிச்சை மையங்கள், தரமான மருந்துகள், பயிற்சி பெற்ற மருத்து வர்கள் என அனைத்து தரநிலைகளும் பேணப்படுகின்றன.

சவால்கள்

எனினும் சில சவால்களும் உள்ளன. மருத்துவர்கள் பற்றாக்குறை, சமூகக் களங்கம், கிராமப்புறங்களில் போதிய சேவைகள் இல்லாமை, நிதிப் பற்றாக்குறை போன்றவை அவற்றில் முக்கியமானவை. இவற்றைச் சமாளிக்க பல்வேறு முயற்சி கள் மேற்கொள்ளப்படுகின்றன. மருத்து வர்களுக்கு ஊக்கத்தொகை, தனியார் துறையுடன் கூட்டு முயற்சி, தொலை மருத்துவ சேவைகள், சமூக விழிப்புணர்வு அதிகரிப்பு போன்றவை அவற்றில் அடங்கும். எதிர்காலத்தில் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. புதிய மருத்துவர்கள் நியமனம், புதிய சிகிச்சை மையங்கள், டிஜிட்டல் ஆலோசனை சேவைகள், ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுத் திட்டங்கள் என பல முன்னெடுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, தமிழ்நாடு மனநல சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. “அனை வருக்கும் மனநலம்” என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. சவால்கள் இருந்தபோதிலும், அவற்றை சமாளிக்கும் திறனும், உறுதியும் கொண்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. தி இந்து ஆங்கிலம் (நவ.3) இதழில்  ஷெரீனா ஜோஸ்பைன் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம்