அறிவியல் கதிர்
அறிவியலாளர்களை குழப்பிய கடல் பளபளப்பு
தென் கடலின் நீல பழுப்பு நீரின் நடுவே பளபளப்பான ஊதா பச்சை திட்டு ஒன்று 2000த்தின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது என்னவென்று அறிவியலாளர்கள் குழம்பினர். அதற்கு விடை இப்போது கிடைத்துவிட்டதாம். பைட்டோபிளாங்டன் எனும் கடல் உயிரியின் குவியல்களையும் உயிரிபுவி வேதிப்பொருட்களையும் தொகுத்த போது ஒரு வினோதமான நுண்ணுயிரி கலவை தெரிந்தது. இந்த ஊதா பச்சை திட்டிற்கு வடக்கே ஒளியை பிரதிபலிக்கும் கடல்நீர் வளையம் ஒன்று ஓடுகிறது. இது கால்சைட் வளையம் என்றழைக்கப்படுகிறது. இதில் சூரிய ஒளியை உட்கொள்ளும் இலட்சக்கணக்கான காக்கோலித்தோபோர்ஸ் (coccolithophores) எனும் உயிரி உள்ளதும் 20 வருடங்களுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டது. இவை கார்பனை எடுத்துக்கொண்டு கால்சியம் செதில்களை உண்டாக்கிக் கொள்கின்றன. ஒரு ஆண்டில் 30 இலட்சம் டன் கார்பனை இவை தேக்குகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளாவிய கார்பன் சுழற்சியில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஆய்வுகள் செயற்கைக்கோள் மூலமே செய்யப்பட்டன. இவை கடலின் மேல்மட்டத்தையே ஆய்வு செய்கின்றன. எனவே கடலியலாளர் பார்னி பால்க் குழுவினர் கடலில் சென்று பல்வேறு ஆழங்களில் கடலின் நிறம், கால்சியமாகும் அளவு, ஒளிச்சேர்க்கை விகிதம், முக்கியமாக அனங்கக கார்பன்(inorganic carbon) மற்றும் சிலிக்கா செறிவுகள் போன்ற பல்வேறு அளவீடுகளை செய்தனர். அனங்கக கார்பனும் சிலிக்காவும் காணப்படுவது காக்கோலித்தோபோர் மற்றும் டை ஆட்டம்(diatom) ஆகிய நுண்ணுயிரிகளைக் காட்டுகின்றன. உறைபனியாய் இருக்கும் இந்த பகுதியில் நுண்ணுயிரிகள் இருக்காது என்று நம்பப்பட்டதை இது பொய்யாக்கியுள்ளது. இங்கு காக்கோலித்தோபோர் குறைவான அளவே இருப்பதால் இங்கு காணப்படும் பளபளப்பு டை ஆட்டம்களினால் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குளோபல் பயோ ஜியோ எகமிக்சன் சைக்கிள்ஸ் எனும் இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறுகிறது.
நம் மூதாதையர்கள் நடை பழகியது எங்கே?
மனித இனத்தின் மூதாதையர்கள் மரத்திலிருந்து இறங்கி புல்வெளிகளில் இயங்கத் தொடங்கியபோது தான் இரண்டு கால்களில் நடப்பது(Bipedalism) ஆரம்பித்தது என்கிற கருத்து இப்போது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியிலுள்ள மேக்ஸ் பிளாங் பரிணாம மனிதவியல் கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், தான்சானியா நாட்டு இஸ்ஸா பள்ளத்தாக்கை சேர்ந்த சிம்பன்சிகளின் உணவு தேடும் பழக்கத்திற்கும் அவை நடைபழகுவதற்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்துள்ளார்கள். ஆய்வாளர்களை ஆச்சரியப் படுத்திய விஷயம் என்னவென்றால், இஸ்ஸா பள்ளத்தாக்கு புல்வெளி களில் வாழ்ந்த சிம்பன்சிகள், மரங் கள் அடர்ந்த காடுகளில் வாழ்ந்த சிம் பன்சிகளைப் போலவே மரங்களி லேயே பெரும் பகுதி நேரத்தைக் கழித்தன. ஏனெனில் உண்பதற்காக விதைகளை பிரித்தெடுக்கவும் பழுக் காத பழங்கள் நார்கள் மிகுந்து இருந் ததால் உண்பதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. அவை உருவத்தில் பெரியவை என்பதால் மரங்களி னூடே செல்லும்போது கிளைகளை பற்றிக்கொண்டு தொங்கியும் அல் லது நேராக நின்று நடந்தும் சென் றன. நாம் எதிர்பார்க்காத சிம்பன்சி களின் இந்த மர வாழ்க்கையும் கிளை களில் நடப்பதும் பழங்கால மனிதக் குரங்குகளும் மனிதனின் மூதாதை இனமும் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு கால்களில் நடக்கும் பழக் கத்திற்கு மர வாழ்க்கை சூழலி லேயே மாறியிருக்கும் என்கிற கருது கோளுக்கு வலுச் சேர்க்கின்றன. 23 மில்லியனிலிருந்து 5.3 மில்லி யன் ஆண்டுகளுக்கு முன் (மயோ சீன் சகாப்தம்) காடுகள் புல்வெளி களாக மாறின. திறந்த புல்வெளி களை கடப்பதற்கு ஹோமினின் எனப்படும் மனித மூதாதையர்கள் நிமிர்ந்த நடைக்கு மாற வேண்டியதி ருந்திருக்கும். இருகால் நடை (Bipedalism)வழக்கமான ஒன்றாக மாறிய பிளியோசீன் சகாப்தத்திற் கும் மயோசீன் சகாப்தத்திற்கும் இடைப்பட்ட காலத்திய ஹோமி னின் படிமங்கள் அதிகம் கிடைக்க வில்லை. கிடைத்த படிமங்கள் மர வாழ்வோடு தொடர்புடைய நீண்ட முன்னங்கைகள், வளைந்த விரல்கள் ஆகிய அம்சங்களைக் காட்டுகின்றன. மேலும் பற்களின் அமைப்பும் கார்பன் ஐசோடோப் ஆய்வுகளும் ஹோமினின் இனம் திறந்த வெளியில் வாழத் தொடங்கி யபோதும் மரத்திலிருந்து கிடைக் கும் உணவையே நம்பியிருந்தன என்று காட்டுகின்றன. சிறுவர் களுக்கு பயிற்சியளிக்கும் சைக்கி ளில் பேலன்ஸிங் வீல் இருப்பது போல நமது மூதாதையர்கள் மரத்தில் கிளைகளை பற்றிக் கொண்டு நிமிர்ந்த நடையை பயிற்சி செய்திருக்கலாம். இதன் விளை வாக நேரான நடைக்கு தேவை யான திறன்களை கொஞ்சம் கொஞ்ச மாக பெற்றிருக்கலாம். உணவு ஆதா ரங்கள் மிகக் குறைவாக இருக்கும் புதிய திறந்த வெளிகளில் பிழைத்தி ருப்பதற்கு இந்த நடை அவசியமா னது. மேலும் இதன் மூலம் உலகின் பல மூலை முடுக்குகளுக்கும் மனித இனம் பரவியிருக்கும். இந்த ஆய்வு பிராண்டீயர்ஸ் இன் இகாலஜி அண்டு எவல்யூசன் எனும் இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறுகிறது.
சர்க்கரை நோய்க்கு சர்க்கரைப் படலம் பாதுகாப்பு!
நீரிழிவு நோயில்(type 1 diabetes) கணையத்திலுள்ள ஒரு திசு அழிந்து விடுகிறது. இப்போது அதை ஒரு சர்க்கரை மூலக்கூறு கொண்டு பாது காக்க முடியும் என்று காட்டப்பட்டுள் ளது. அமெரிக்காவிலுள்ள மேயோ மருத்துவ மனையில் ஆய்வாளர்கள் இத்தகைய சர்க்கரை நோய் ஏற்படு மாறு வளர்க்கப்பட்ட எலிகளில் சோதனை செய்துள்ளார்கள். இன் னொரு எலி கூட்டமானது அவற்றினு டைய கணையத்தின் பீட்டா செல் களில் ஒரு குறிப்பிட்ட என்சைம் சுரக்கு மாறு மரபணு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் அந்த திசுவானது சியாலிக் அமிலம் எனும் சர்க்கரை படலத்தால் பூசப்பட்டது. பீட்டா செல்கள்தான் இன்சுலினை சுரந்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. டைப் 1 சர்க்கரை நோயில் அவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் தவறுதலாக தாக்கப்படு கின்றன. எலிகளில் நடந்த சோதனை யில் மரபணு மாற்றப்படாத குழுவில் 60% எலிகளுக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டது. சியாலிக் அமிலம் சுரந்த குழுவில் 6% எலிகளுக்கே சர்க்கரை நோய் ஏற்பட்டது. சர்க்கரை பூச்சின் மூலம் பாதுகாப்பு என்பது புற்று நோய் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டது. சர்க்கரை பூச்சா னது பீட்டா செல்கள் தாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று உட லின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு அறிவுறுத்துவது போல் அமைந்துள் ளது. இந்த சிகிச்சையில் நோய் எதிர்ப்பு மண்டலமும் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்கிறார் ஆய்வா ளர் ஜஸ்டின் சோ. இது மிகவும் நம்பிக்கையளிக்கக்கூடியது. ஆனால் மனிதர்களில் கிளினிக்கல் சோதனை கள் செய்யப்பட வேண்டும். இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களில் டைப் 1 நபர்கள் டைப் 2 நபர்களுடன் ஒப்பிடும்போது குறைவுதான். ஆனால் உலகளவில் பல லட்சம் மக்களை பாதிக்கும் இந்த வகை சர்க்கரை நோய்க்கு தொடர்ந்து இரத்த சர்க்கரை அளவு கண்காணிக்கப் பட வேண்டும்; தினமும் இன்சுலின் ஊசிகள் அல்லது இன்சுலின் பம்ப் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்கு தீர்வாக நோய் எதிர்ப்பு மண்டலத்தை கட்டுப்படுத்தாத செல் மாற்று சிகிச்சை இருக்கலாம் என்கிறார் நோய் எதிர்ப்பு இயலாளர் விர்ஜினியா ஷப்பீரோ. இந்த ஆய்வு ஜர்னல் அப் கிளினிக்கல் இன்வெஸ்டிகடியோ என்கிற இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறு கிறது.
