tamilnadu

img

சாத்தான்குளம் படுகொலை வழக்கு.... சிபிஐ அறிக்கைக்குப் பின்னரே ஜாமீன் குறித்து பரிசீலனை

மதுரை:
 சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில்உள்ள காவல்துறையை சேர்ந்த முருகன், தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜா ஆகியோரது ஜாமீன்மனுக்களை திரும்பப்பெறு மாறு நீதிபதி கேட்டுக்கொண்ட தையடுத்து அவர்களது மனுக்கள் திரும்பப்பெறப்பட்டன. சாத்தான்குளம் தந்தை-மகன்கொலை வழக்கை தற்போது சிபிஐவிசாரித்து வருகிறது. இன்னும்விசாரணை முழுமையடை வில்லை. இந்த நிலையில் காவலர்கள் ஜாமீன்கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஜாமீன் கேளுங்கள். அப்போது அது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கும். எனவே தற்போது மனுவை திரும்பப்பெறுங்கள் என அறிவுறுத்தினர். இதையடுத்து காவலர்களின் ஜாமீன் மனுக்களை அவர்களது வழக்கறிஞர்கள் திரும்பப்பெற்றுக்கொண்டனர்.