செயற்கைக்கோள் ஏவுவதில் தாமதம்
பூமியின் மேற்பரப்பை கண்கா ணிக்கும் வகையில் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து ஏவவிருக்கும் செயற்கைக்கோளில் தொழில்நுட்பக் கோ ளாறு ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் தான் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றங்கள், வள மேலாண்மை மற்றும் இயற்கைப் பேரழிவுகள் குறித்த முக்கிய மான தகவல்களையும் பெறலாம்.