மன்னார்குடி
மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 50 சானிடைசர் திரவ பாட்டில்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் என்.95 கிருமி ஹதடுப்பு முகக் கவசங்கள் சானிடைசர் உள்ளிட்ட அடிப்படை கிருமி தடுப்பு உபகரணங்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ளது.
இதனால் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் முதல் நிலை மனிதர்களான மருத்துவர்களும் செவிலியர்கள் மருத்துவத்துறை ஊழியர்கள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் தியாக உள்ளத்துடனும் 24 மணி நேரம் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். மன்னார்குடியில் உள்ள திருவாரூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சானிடைசர் கிருமி தடுப்பு முகக்கவசத்திற்கு பற்றாக்குறை உள்ளது. இதை உணர்ந்த மார்க்சிஸ்ட் கட்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகரக்குழு சானிடைசர் திரவ 50 பாட்டில்களை சேகரித்து திங்கட்கிழமையன்று மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஆர். விஜயகுமாரிடம் அளித்தது. நகரச் செயலாளர் எஸ். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகரக்குழு உறுப்பினர் கே. அகோரம், கட்சி ஊழியர்கள் வி.கோவிந்தராஜ், கோவி.லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் நோய் தொற்று அதிகரித்து வரும் இந்நேரத்தில் மருத்துவத்தின் அத்தியாவசிய அடிப்படை பொருளின் . இந்த நன்கொடை மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவர்கள் பொது மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
====ப. தெட்சிணாமூர்த்தி===