tamilnadu

img

தமிழ்நாட்டை கொத்திக் குதறிட காத்திருக்கும் காவிப் பருந்துகள்

தமிழ்நாட்டை கொத்திக் குதறிட காத்திருக்கும் காவிப் பருந்துகள்

ஆசிரியர் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கே.பாலபாரதி எச்சரிக்கை

திண்டுக்கல், மே 4- தமிழ்நாட்டை கொத்திக் குதறிட  காத்திருக்கும் காவிக் கழுகுகளிட மிருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துலைவர்களுள் ஒருவரான கே.பால பாரதி தெரிவித்தார். திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் 7வது மாநில மாநாட்டு பேரணி  மற்றும் பொதுக்கூட்டம் சனியன்று  மாலை நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அவர் பேசியதாவது: கல்வி ஒரு வரப்பிரசாதம் கல்வி ஒரு சமூகத்திற்கு கிடைக்கப் பெறாத வரப்பிரசாதம். வேதகாலம், கற்காலம், பொற்காலம் என எல்லா காலங்களும் இருந்தது. ஒரு சிறு  பகுதி தான் கல்வி கற்கும் உரிமையை பெற்றிருந்தார்கள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மற்றும் பெண் குழந்தைகள் பள்ளிக்கூடங்களின் நிழலில் கூட ஒதுங்க முடியாது. கார்ப்பரேட் மயமும் காவிமயமும் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிற தேசிய கல்விக் கொள்கை குருகுலக்கல்வியை ஆத ரிக்கிறது. இந்த கல்விக்கொள்கையில் ஒன்று வணிகமயமாக்குவது, இரண்டாவது மத்திய அரசின் அதிகாரமயமாக்குவது, மூன்றாவது காவி மயமாக்குவது. கல்வி தரமிழந்த குஜராத் மாடல் குஜராத்தில் உள்ள ஒரு பத்திரிக்கை சொல்கிறது. அங்குள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் 96 ஆயிரம் பேர் தாய்மொழியான குஜராத்தி மொழியில் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அங்குள்ள 157 அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இது தான் பாஜக ஆளும் குஜராத் மாடல். 60 ஆயிரம் பள்ளிகள் இழுத்து மூடல் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங் களில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் இழுத்து மூடப் பட்டுள்ளன. அரசு பள்ளிகளை இணைக்கிறோம் என்று பள்ளிகளுக்கு இணைப்பு விழா நடத்தி மூடுவிழா செய்திருக்கிறார்கள். ஆனால் பாஜக ஆளும் இந்த மாநிலங்களில் 2 லட்சமாக இருந்த தனியார் பள்ளி களின் எண்ணிக்கை தற்போது 4 லட்சமாக உயர்ந்திருக்கிறது. காவி மயமாக்க கல்வியை ஆயுதமாக ஒன்றிய பாஜக ஆளும் அரசுகள் ஒரு வீட்டை புல்டோசர் மூலம் இடிப்பது மட்டுமல்ல காவி அரசியல். கல்வியை காவிமயமாக்குவதும் தான் காவி அரசியல். கல்வியை ஆயு தமாக கையிலெடுத்து நம்மை தாக்கு வார்கள். அறிவியல் உண்மைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி புராணங்களை, மூட நம்பிக்கைகளை கல்வியில் புகுத்துகிறார்கள். பயங்கரவாதிகளின் துப்பாக்கியும் உங்கள் ஒற்றை வார்த்தையும் பஹல்காமில் நடைபெற்ற படு கொலையில் 26 பேர் பலியா னார்கள். நீங்கள் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுங்கள், மாற்றுக் கருத்து இல்லை. பயங்கரவாதிகளின் துப்பாக்கிக்கு எப்படி அன்பு, பாசம்,  மனிதர்கள், நேசம், உயிர்கள் பற்றி தெரியாதோ, அது போலத்தான் ஒற்றை வார்த்தையில் பாகிஸ்தானி யரை இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொன்ன உத்தரவும், அதற்கும் இதற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? தமிழ்நாட்டை வட்டமடிக்கும் பருந்துகள் எப்படியாவது இந்த தமிழ்நாட்டை கொத்திக்கொன்று செல்ல வேண்டும் என்று எத்தனை கழுகுகள் அலை கின்றன; அந்த பருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டாமா? கோழி தன் குஞ்சுகளை காப்பது போல ஆசிரியர்கள் இந்த குழந்தைகளை அறிவார்ந்தவர்களாக மாற்றி வரு கிறார்கள். அவர்களை பாதுகாக்க வேண்டாமா? தமிழ்நாட்டுக்கென தனி கல்விக்கொள்கை என்னாச்சு தேசிய கல்விக்கொள்கைக்கு மாறாக தமிழ்நாட்டிற்கு என்று தனித்த கல்விக்கொள்கையை நாங்கள் அறிவிப்போம் என்று முதல்வர் சொன்னார். அந்த கல்விக்கொள்கை யை அறிவிக்க வேண்டும். இவ்வாறு கே.பாலபாரதி பேசி னார்.