ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்தது! மும்பை, ஜன. 5 - இந்திய ரூபாய் மதிப்பு, தொடர்ந்து 4ஆவது நாளாக சரிவைச் சந்தித்தது. வார வர்த்தகத்தின் முதல் நாளான திங்களன்று, டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து 90 ரூபாய் 28 காசு களாக முடிவடைந்தது. வலுவான டாலர் மற்றும் மந்தமான உள்நாட்டு பங்குச் சந்தை நிலவரம் உள்ளிட்டவை ரூபாய் சரிய காரணமாக அமைந்தன.