tamilnadu

img

தீக்கதிர் சந்தா தொகையாக தஞ்சாவூரில் ரூ. 4.17 லட்சம் அளிப்பு

தீக்கதிர் சந்தா தொகையாக தஞ்சாவூரில் ரூ. 4.17 லட்சம் அளிப்பு

தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிருக்கு, ஆண்டுச் சந்தா 118, அரையாண்டு சந்தா 122 என 240 சந்தாக்களுக்கான தொகையாக ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 800 வழங்கப்பட்டது. தீக்கதிர் பொறுப்பாளரும், மாநிலக்குழு உறுப்பினருமான ஐ.வி. நாகராஜன், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் ஜெயபால் ஆகியோரிடம், சிபிஎம் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் சந்தா தொகையை வழங்கினார்.  மூத்த தலைவர் என். சீனிவாசன், தீக்கதிர் தஞ்சாவூர் மாவட்டப் பொறுப்பாளர் ஆர். மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜெயபால், பி.செந்தில்குமார், என். சுரேஷ்குமார்,  ஆர். கலைச்செல்வி, என். சரவணன், எஸ். செல்வராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் என். குருசாமி, இ. வசந்தி, மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் டி. முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.