பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை அமைக்க ரூ.236 கோடி நிதி ஒதுக்கீடு
ருச்சி மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு திருச்சிராப்பள்ளி, மார்ச் 26 - திருச்சி மாநகராட்சியின் 2025- 2026 ஆம் ஆண்டிற்கான வரவு -செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் கூட்டம் மாமன்ற கூட்ட ரங்கில் மேயர் அன்பழகன் தலை மையில் புதனன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பி னர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிதிக் குழு தலைவர் முத்து செல்வம் வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதன் விவரம் பின்வருமாறு: தமிழ்நாட்டில் வரலாற்று முக்கி யத்துவமும், கணினி மென்பொ ருட்கள் துறையில் சமீப காலத்தில் அதிக வளர்ச்சி பெற்று வரும் திருச்சிராப்பள்ளி நகரத்தில், மாநக ராட்சியால் மக்களுக்கு வழங்கப் படும் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவதற்கும், எதிர்கால நகர மயமாக்குதலைக் கருத்தில் கொண்டும், அதனால் ஏற்படும் புவி வெப்பமயமாதலை தடுக்க தேவை யான வளர்ச்சிப் பணிகளை மேற் கொள்வதை கருத்தில் கொண்டும் இவ்வாண்டு வரவு-செலவு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் காந்தி மார்க்கெட்டை புனரமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை ரூ.60 கோடியில் தயார் செய்யப் பட்டு, பின்னர் உரிய அனுமதி மற்றும் மானியம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும். உய்யக்கொண்டான் வாய்க்கா லின் குறுக்கே பீமநகர் பகுதியில் 5 ரோஸ் திருமண மஹால் மற்றும் குழுமிக் கரையினை இணைக்கும் வகையில் வலு வூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் பாலம் அமைக்கும் பணிக்கு ரூ.2 கோடியில் மதிப்பீடு தயார் செய் யப்பட்டு நிர்வாக அனுமதி பெறு வதற்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் உய்யக்கொண்டான் வாய்க்கால் குறுக்கே பீமநகர் பக்காளி தெரு குழுமிக்கரையினை இணைக்கும் வகையில் ரூ. 2 கோடிக்கு நிர்வாக அனுமதி பெறு வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காவிரி ஆற்றின் தென் கரை பகுதியினை அழகுபடுத்தும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை ரூ.15 கோடி மதிப்பிட்டில் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனு மதிக்கு அனுப்பி வைக்கப்படும். மாநகராட்சி மைய அலுவலக வளாகத்திற்குள் கூடுதல் அலுவ லக கட்டிடம் மற்றும் வரவேற்பு வளைவு கட்டும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை ரூ. 50 கோடி மதிப் பீட்டில் தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படும். திருச்சி மாநகராட்சி கம்பரசம் பேட்டை தலைமை நீர் பணி நிலைய வளாகத்தில் ரூ.4.65 கோடி மதிப்பில் விருந்தினர் மாளிகை கட்டிடம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப் பட்டு நகராட்சி நிர்வாக இயக்கு னரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை அமைக்கும் பணியினை மேற் கொள்ள விரிவான திட்ட அறிக்கை ரூபாய் 236 கோடி மதிப்பீட்டில் தயார் செய்து அரசிடம் உரிய நிர்வாக அனுமதி பெறுவதற்கு நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ரூ. 100 கோடி முனி சிபல் பாத்திரங்கள் மூலம் நிதி திரட்டவும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது. உய்யக்கொண்டான் வாய்க்காலை தூய்மைப்படுத்தும் பணி மாநகராட்சியில் அம்ருத் புதை வடிகால் அமைக்கும் திட்டம் நான்கு தொகுப்புகளாக பணிகள் நடந்து வருகின்றன. நான்காவது தொகுப்பு முடியும் பட்சத்தில் உய்யக் கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பது தடைபடும். தடை படாத இடங்களில் சிறிய அளவி லான கழிவுநீர் சுத்திகரிப்பு மையங் கள் ஏற்படுத்தி அந்த பகுதிகளில் சேகரமாகும் கழிவு நீரை புதை வடிகால் குழாய்களுக்கு செல்லும் வகையில் மாற்றி அமைத்து உய்யக் கொண்டான் வாய்க்காலை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சியின் ஐந்து மண்ட லங்களிலும் தலா ஒரு நூலகம் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டு வதற்கு நடவடிக்கை எடுக்கப் படும். மேலும் 5 மண்டலங்களிலும் இட வசதிக்கு ஏற்ப தலா ஒரு உள் விளையாட்டு அரங்கங்கள் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டு வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு பட்ஜெட் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பஞ்சப்பூர் சூரிய ஒளி சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் மையம்: மேயர் தகவல்
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியதாவது: திருச்சி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீதிமன்றம் முதல் விமான நிலையம் வரை புராதன தெருவிளக்குகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெஸ்ட்ரி பள்ளி அருகிலும் மற்றும் அலெக்சாண்டிரியா சாலையிலும் இடவசதிக்கேற்ப சாலையோரப் பூங்காக்கள் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில், மொத்தம் ரூ.2 கோடி செலவில்அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டத்திற்கு ஒன்று வீதம் 5 கோட்டங்களிலும் உணவுத் தெரு (தலா ரூ.1கோடி மதிப்பீட்டில், மொத்தம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், வெள்ள பாதுகாப்பு உந்து நிலையங்கள், வெள்ள அபாயமுள்ள 5 இடங்களில் மொத்தம் ரூ.10கோடி மதிப்பீட்டில், தலா ரூ.2 கோடி வீதம், கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கீழ்க்கண்ட பணிகள் நகர்ப்புற அமைச்சர் வழியாக அரசிடம் உரிய நிதியுதவி பெற்று மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும். பஞ்சப்பூர் பகுதியில் சுமார் ரூ.115 கோடி மதிப்பீட்டில் 19.20 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் மையம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு மேயர் அன்பழகன் பேசினார். நிருபர்கள் கேள்வி பட்ஜெட்டில் ரூ.128.95 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இதனை மாநகராட்சி எப்படி சமாளிக்கும்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, திருச்சி மாநகராட்சிக்கு வரவேண்டிய வரி பாக்கி மற்றும் நிலுவைத் தொகைகளை வசூல் செய்து பற்றாக்குறையை சரி செய்வோம் என்று மேயர் அன்பழகன் கூறினார்
அதிமுக கவுன்சிலர்கள்
வெளிநடப்பு அதிமுக கவுன்சிலர்கள் அம்பி காபதி, அரவிந்தன் அனுசியா ரவி சங்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் மாநகராட்சி அதிமுக தலைவர் அம்பிகாபதி, கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருக்கும் போக்குவரத்து நெரிசலை போக்கும் உயர்மட்ட மேம்பாலங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. மாநகராட்சியில் இருந்து வரக்கூடிய வருவாய் அனைத்தையும் பஞ்சப் பூர் புதிய பேருந்து நிலைய பணி களுக்கு கொண்டு செல்கிறார்கள். அதே போன்று மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதி எதுவும் அறி விக்கப்படாதது ஏமாற்றம் அளிக் கிறது என்று அவர்கள் கூறினர்.