tamilnadu

img

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் முழுசெலவையும் அரசே ஏற்க வேண்டும் ஓய்வூதிய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் 
முழுசெலவையும் அரசே ஏற்க வேண்டும்
ஓய்வூதிய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவச் செலவு முழுவதையும் மீளப் பெறும் வகையில், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.சரவணன் தலைமை வகித்தார். சுப. காந்திநாதன் தொடக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாநில இணைச் செயலாளர் க. கருப்பையா, மாவட்ட இணைச் செயலாளர் ஏ. கணேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் சி.பாலையா, ஆர்.சிவகுருநாதன், கே.செல்வகுமார், பி.மாரிமுத்து ஆகியோர் பேசினர். முன்னதாக ஆர். நெடுஞ்செழியன் வரவேற்க, மாவட்டப் பொருளாளர் என்.கிருஷ்ணன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், மருத்துவச் செலவு முழுவதையும் மீளப் பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 80 வயதை எட்டியவர்களுக்கு 20 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச் சலுகையை ஒன்றிய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பப்பட்டன.