tamilnadu

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது : சிபிஎம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது : சிபிஎம்

புதுதில்லி, ஜூலை 6- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதி மன்றத்தின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கட்சி யின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றம் தன் பணி யாளர் தேர்வு செயல்முறை யில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீட்டை அறிமுகப் படுத்தி உத்தரவு பிறப்பித் திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கி றது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் நீதிமன்றம் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் நீதித்துறை அல்லாத பணி யாளர்களில் பட்டியல் சாதி யினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரை ஆட் சேர்ப்பு செய்வதற்கான ஒரு பட்டியல் முறையை செயல் படுத்த தலைமை நீதிபதி, குறிப்பிடத்தக்க நடவடிக்கை யாக, தொடங்கியுள்ளார். நீதித்துறை அல்லாத நீதிமன்ற ஊழியர்களை நிய மனம் செய்வதில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் முக்கியமான சீர்திருத்தத்தை எளிதாக்கும் வகையில், ஊழியர் சேர்ப்பு விதிகளைத் திருத்துவதற்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் எடுத்த முயற்சியை கட்சி பாராட்டுகிறது. இதுவரை உறுதியான நடவடிக்கையின் வரம்பிற்கு வெளியே இருந்த துறை களுக்கு  இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்பது சமூக நீதி இயக்கத்தின் நீண்டகால கோரிக்கை யாகும். அந்த வகையில் இந்த முடிவு ஒரு வரவேற் கத்தக்க நடவடிக்கை யாகும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கை யில் கூறியுள்ளது. (ந.நி.)