பெரிய குளத்தை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
நாகப்பட்டினம், அக்.8 - இரிஞ்சியூர் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த பெரிய குளத்தில் மண்டி கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்றி தூர்வாரி மீண்டும் பயன்பாட் டுக்கு கொண்டு வர வலியு றுத்தி கிராம மக்கள் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடு பட்டனர். நாகப்பட்டினம் மாவட் டம் கீழ்வேளூரை அடுத்த 75-அணக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள இரிஞ்சியூர் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் பல ஆண்டு களாக எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் அவதியுற்று வரும் நிலையில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் செவ்வாயன்று உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் வி.மாரிமுத்து தொடங்கி வைத்தார். 75-அணக்குடி, இரிஞ்சி யூர், அய்யடிமங்கலம் ஆகியவற்றை இணைக்கக் கூடிய ஆற்றங்கரை சாலையை செப்பனிட வேண் டும். பாதியிலயே நிறுத்திய இரிஞ்சியூர் மயான சாலையை பூர்த்தி செய்ய வேண்டும். இரிஞ்சியூரில் உள்ள பெரிய குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட் ொண்டு வர வேண்டும். காலஸ்தினாபுரத்தில் மயான கொட்டகை அமைக்க வேண்டும். கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, மின் விளக்கு குறைபாட்டை சரி செய்ய வேண்டும். ஊராட்சியில் நூறு நாள் வேலையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தினர். பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலு வலர் ராணி, ஒன்றிய பொறி யாளர் செந்தில்குமார் பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக் கைகளை உடனே நிறை வேற்றி தருவதாக உறுதி அளித்தார். அதன் பேரில் உண்ணாவிரதப் போ ராட்டத்தை கைவிட்டனர்.