tamilnadu

வங்கி ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் சு.வெங்கடேசன் எம்.பி.-யைச் சந்தித்தனர்

மதுரை, பிப்.23- சம்பளப் பேச்சுவார்த்தையை இழுத்தடிக்காமல் வங்கி ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத் துப் பேசவேண்டும். வங்கிகள் பெற்ற லாபத்தை வராக் கடனில் வரவு வைத்துவிட்டு வங்கிகள் நஷ்டத்தில் செயல்படுவதாக பொய்யுரைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டுமென அனைத்து வங்கி ஊழியர் சங்கங்கள் வலி யுறுத்தியுள்ளன. மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசனை பெபி, ஏஐ பிஇஏ, என்சிபிஇ உள்ளிட்ட பல் வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் சனிக்கிழமை சந்தித்து கோரி க்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய என்சிபிஇ தலைவர் பரவை பாலு, “ 2017-ஆம் ஆண்டோடு ஐந்தாண்டுக்கான ஊதிய உயர்வு காலாவதியாகிவிட்டது. கிட்டத் தட்ட 29 மாதங்கள் கடந்தும் 39 முறை பேச்சுவார்த்தை நடத்தி யும் இதுவரை ஊதிய உயர்வு உடன்பாடு எட்டப்படவில்லை. வங்கிகள் நஷ்டத்தில் இயங் குவதாக மத்திய அரசு பொய் கூறு கிறது. கடந்த 2013-2014-ஆம் ஆண்டு முதல் 2018-2019-ஆம் ஆண்டு வரை வங்கிகளின் நிகர லாபம் 1,49,804 கோடி. அதே நேரத்தில் 2013-2014-ஆம் ஆண்டு முதல் 2018-19-ஆம் ஆண்டு வரை வராக்கடன் 2,16,410 கோடியாக உள்ளது. இதில் 95 சதவீதமான கடன் பெருமுதலாளிகள் பெற்ற தாகும். இதைத் திரும்பப் பெற அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. மாறாக வங்கிகளின் நிகர லாபத்தை வராக்கடனில் வரவு வைத்துவிட்டு ரூ.66,600 நஷ்டத்தில் வங்கிகள் செயல்படு கின்றன. இதனால் சம்பளத்தை உயர்த்த முடியவில்லை என்கின்றனர். பொய்யுரைப்பதே மத்திய அரசின் வேலையாக மாறிவிட்டது என்றார்.