சன்மார்க்க அன்பர்கள் எதிர்ப்பு
வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழாவிற்கான ஏற்பாடுகள் என்ற பெயரில், 20-க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்படுவதற்கு சன்மார்க்க அன்பர்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.
மரங்கள் அழிப்பு?
கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளிச் சிறைச்சாலை இடத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக நூற்றுக்கணக்கான மரங்கள் அழிக்கப்படவுள்ளதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
டெங்கு பாதிப்பு 3 மடங்கு அதிகம்
தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டைவிட 2024-இல் டெங்கு பாதிப்பு மூன்று மடங்கு அதிகரித்து 27,378 பேர் பாதிக்கப்பட்டனர். 13 பேர் உயிரிழந்தனர். மலேரியா (343 பேர்) மற்றும் டைஃபாய்டு (2,817 பேர்) பாதிப்புகளும் பதிவாகி யுள்ளன.
ஊதிய உயர்வு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் புலிகள் காப்பகங்கள் செயல் பட்டு வருகின்றன. இங்கு 500-க்கும் மேற்பட்டோர் வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ.12,500-லிருந்து, ரூ.15,625 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வால் 669 வேட்டைத் தடுப்பு காவலர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெப்பநிலை அதிகமாக இருக்கும்
சென்னை: தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பிப்.11 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசுமை எரிசக்திக் கழகம் அழைப்பு
தமிழகத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்ய அனல், காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, நீர்மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, தமிழ கத்தில் நீரேற்று மின்திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் உள்ள நிறுவனங்களுக்கு பசுமை எரிசக்திக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஞானசேகரனிடம் குரல் மாதிரி சோதனை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலி யல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு பிப்.7 ஆம் தேதி வரை நீதி மன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை, உறுதி செய்ய பிப்.6 அன்று ஆய்வகத்தில் குரல் பரிசோதனை நடத்த அனுமதித்து சைதாப்பேட்டை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ள ஓட்டு போட முயன்ற 2 பேர் கைது
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வீரப்பன்சத்திரம் வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்ற கரூரைச் சேர்ந்த நா.த.க.வினர் சசிகுமார், கவாஸ்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வெளியூரில் இருந்து நாம் தமிழர் கட்சி யினரை அழைத்து வந்து கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக புகார் அளிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 64.02 சதவீத வாக்குகள் பதிவாகின.
மில்கி மிஸ்ட் தொழிற்சாலை விரிவாக்கம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.900 கோடியில் தொழிற்சாலையை மில்கி மிஸ்ட் நிறுவனம் விரிவாக்கம் செய்கிறது. ரூ.1,777 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாடு அமைச்ச ரவை ஒப்புதல் அளித்த நிலையில், முதல் கட்டமாக ரூ.900 கோடி முதலீடு செய்கிறது. பெருந்துறையில் உள்ள தொழிற் சாலையை 2.26 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரி வாக்கம் செய்ய மில்கி மிஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மில்கி மிஸ்ட் ஆலை விரிவாக்கத்தினால் கூடுதலாக 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சார் பதிவாளர்களுக்கு உத்தரவு
அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படும் என சார்பதிவாளர்கள் பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது. மூல ஆவணத்தின் நகல் மற்றும் சார்பதி வாளர் அலுவலகத்தில் உள்ள நகலை பார்த்து பத்திரப் பதிவு செய்ய வேண்டுமென சார் பதிவாளர்களுக்கு தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படும் என சார்பதிவாளர்கள் பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது. மூல ஆவணத்தின் நகல் மற்றும் சார்பதி வாளர் அலுவலகத்தில் உள்ள நகலை பார்த்து பத்திரப் பதிவு செய்ய வேண்டுமென சார் பதிவாளர்களுக்கு தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.