tamilnadu

img

‘மதுரை கோவில்கள் ஆன்மீகத் தலங்கள் மட்டுமல்ல; மக்கள் வாழ்வியலின் பிரதிபலிப்புகள்!’

மதுரை, செப்.9 - மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மதுரை தமுக்கம் மைதா னத்தில் புத்தகத் திருவிழா நடை பெற்று வருகிறது. ஞாயிறன்று நடை பெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் பங்கேற்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசிய தாவது: சிந்துச் சமவெளி நாகரீகம் கண்டு பிடிக்கப்பட்டதன் 100-ஆவது ஆண்டை நாம் கொண்டாடிக் கொண் டிருக்கிறோம். இந்த நேரத்தில் புதிய கண்டுபிடிப்புகளை பகுத்தறி வோடும், அறிவியல் மனப்பான்மை யோடும் ஏற்றுக்கொள்ளும் பக்கு வத்தை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

ஆன்மீகத் தலங்கள் மட்டுமல்ல

மதுரை மீனாட்சியம்மன் கோவி லில் உள்ள 78 கல்வெட்டுகளில் 77  கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள்.  ஒரே ஒரு கல்வெட்டு தான் சமஸ்கிருத  மொழியில் எழுதப்பட்டுள்ளது. 1,800 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் தான் மதுரையில் ஆடிவீதிகள், மாசி வீதிகளின் பெயர் வருகிறது. ஒரு  நகரத்தின் வாழ்வியலோடு மொழி யும் கலந்திருந்தது என்பதற்கு மதுரை நகரமே சாட்சி. மீனாட்சி  அம்மன் கோவில், திருப்பரங்குன் றம் கோவில், அழகர் கோவில் கோபு ரங்கள் எப்போது கட்டப்பட்டன என்ப தற்கு வரலாறுகள் உள்ளன. ஆனால்,  இந்தக் கோவில்கள் எப்போது உரு வானது, எந்தெந்த காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது என்பது மிக முக்கியமானது. திருப்பரங்குன்றம் கோவில் உருவானது குறித்து  சங்க இலக்கியத்தில் உள்ள ஓவி யக்குறிப்பு தெளிவுபடுத்துகிறது. மீனாட்சி அம்மன் கோவில், திருப்ப ரங்குன்றம் கோவில், அழகர் கோவில் ஆகியவை ஆன்மீகத் தலங்கள் மட்டுமல்ல; இதில் வர லாறு, தத்துவம், கலை, பொருளா தாரம், வாழ்வியலும் உள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் குறித்து  ஃபுல்லர் ஆய்வு மேற்கொண்டு எழுதிய “தேவியின் திருப்பணியா ளர்கள்”, திருப்பரங்குன்றம் கோவில்  குறித்து நாகப்பன் ஆய்வு மேற் கொண்டு எழுதிய “வேற்கோட்டம்”, அழகர்கோவில் குறித்து தொ.பரம சிவம் ஆய்வு செய்து எழுதிய “அழ கர்கோவில் ஆய்வு” ஆகிய மூன்று நூல்களையும் அனைவரும் படிக்க வேண்டும். 

சாமானிய மக்களின் எழுத்து

இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் 1,200-க்கும் மேற்பட்ட பானை ஓடுகள், 100 பிராமி கல்வெட் டுகள், 20 நாணயங்கள், 10 முத்திரை  மோதிரங்கள், 6 தங்கக் காசுகள் கிடைத்துள்ளன. இதில் உள்ள எழுத் துக்களை சாமானிய மக்கள் தான்  எழுதியுள்ளனர். எழுதத் தெரிந்த சமூகமாக தமிழ்ச்சமூகம் இருந்துள் ளது. எழுத்தறிவை தமிழ்ச்சமூகம் எப்படி சாத்தியமாக்கி சாதித்தது என்பது குறித்து மேற்கண்ட கண்டு பிடிப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

மதுரைக் காவலின் வரலாற்றுப் பின்னணி

தென்னிந்தியா முழுக்க இருந்த 10 பெரிய நகரங்களில் முதல் இடத்தில் இருந்த நகரம் மதுரை. 10  பெரிய நகரங்களினுடைய பட்டிய லில் மக்கள் தொகை அடிப்படை யில் முதல் நகரம் மதுரை. இந்த நக ரத்தை, காவல் முறைமைக்குள் எப்படி கொண்டு வருவது என்று யோசிக்கிற போது தான் மிக முக்கிய மான பல பிரச்சனைகள் வந்தன.  1801 வது வருடம் மதுரை மாவட்டத் திற்கு ஒரு காவல்துறை கண்காணிப் பாளர் நியமிக்கப்படுகிறார். அவர் பதவியேற்ற ஒரு வாரத்தில் தகவல் அறிந்த குடிக்காவல் காவல்காரன் ஒருவன் எஸ்.பி.யை சந்தித்து எனக்கு காவல்கூலி கொடுக்க வேண்டுமெனக் கூறிவிட்டுச் செல் கிறான். இதையடுத்து எஸ்.பி., காவல் காரனுக்கு பாதியளவு காவல்கூலியை  கொடுக்கிறார். அதைத் தொடர்ந்து பிரச்சனை ஏதும் மதுரையில் எழ வில்லை என்பதை எஸ்.பி. தனது மேலதிகாரிக்கு கடிதம் எழுது கிறார்.  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே காவல்துறை பரா மரிக்கும் பழைய கட்டிடம் ஒன்று உண்டு. அந்த கட்டிடத்தை காவல் துறை மியூசியமாக மாற்ற வேண் டும். சென்னையில் காவல்துறை மியூ சியம் ஒன்று இருக்கின்றது. அதே போல் மதுரையில் ஒன்றை உரு வாக்க வேண்டும். மதுரையின் காவல் முறை என்பது மிக பழமை வாய்ந்த  ஒரு வரலாற்றுப் பின்னணி கொண் டது. 

ஜூலியஸ் சீசரின் நாணயம்

மதுரை கோட்ஸ் ஆலை சொல்லும் செய்தி ஒன்று உண்டு. கி.மு. 100 ஆம் ஆண்டில் கிரேக் கத்தை ஆண்ட ஜூலியஸ் சீசர் காலத் தின் நாணயம் மதுரை கோட்ஸ் தொழிற்சாலை பணிக்காக வானம்  தோண்டும் போது கண்டுபிடிக்கப் பட்டது. இந்த நாணயம் குறித்து 1932 ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேய அறிஞர்  அவருடைய புத்தகத்தில் குறிப் பிட்டு இருந்தார். இந்த நாண யத்தைப் பற்றி அவர் எழுதிய நூலை மதுரை தங்க ரீகல் தியேட்டர் அருகில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கிய போது  அதில் படித்தேன். அந்த நாணயம்  அமெரிக்கன் கல்லூரியில் இருக் கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டி ருந்தது. ஆனால், அப்படிப்பட்ட  நாணயம் எதுவும் இங்கு இல்லை என்று கூறினார்கள். பின்னர் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு கல்லூரியில் ஒரு  நிகழ்ச்சிக்காக சென்ற போது அங்குள்ள நூலகத்திற்கு சென்றேன்.  நூலகத்தின் கீழ் தளத்திற்கு சென்ற போதுதான் அங்கு பழைய பொருட்கள் காட்சிப்படுத்தி வைக்கப் பட்டு இருந்தது. அதில் ஒரு கண்ணாடிப் பெட்டியில், அந்த நாணயம் இருந்தது.  வரலாறு ஒருபோதும் அழியாது. மீண்டும் மீண்டும் காட்சிக்கு வந்து  கொண்டே இருக்கும் அதை படிக்க வும் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் பேசவும் தகுதியான மனிதர்களாக நாம் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சு.வெங்கடேசன்  எம்.பி., பேசினார். அன்றைய திண்ணைகளும் - இன்றைய வரவேற்பறைகளும் என்ற  தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர் சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் இராம லிங்கம் உரையாற்றினார். புத்தகத் திருவிழாவின் இரண்டாம்  நிகழ்விற்கு மதுரை காவல் ஆணை யர் ஜெ. லோகநாதன் தலைமை வகித்தார். கூடுதல் உதவி ஆணை யர் மதுக்குமாரி, உதவி காவல் ஆணையர் ராஜேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.