tamilnadu

img

சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் விசா

சீன சுற்றுலாப் பயணிகளுக்கு  மீண்டும் விசா

இந்திய - சீன உறவுகளில் ஒரு புதிய துவக்கம்

இந்திய அரசு சீன சுற்றுலாப் பயணி களுக்கான விசாக்களை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இந்திய- சீன உறவுகளை மீண்டும் கட்டமைக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக் கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   குறிப்பாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சீனக் குடிமக்களுக்கு இந்தியா சுற்றுலா விசாக்களை வழங்கத் தயாராகி வருகிறது. “ஜூலை 24 (வியாழன் ) முதல், சீனக் குடிமக்கள் இந்தியாவில் சுற்றுலா செல்வ தற்கான விசாவுக்கு விண்ணப்பிக்கத்  துவங்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.  சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன்  இந்தியாவுடனான தொடர்பையும் உறவுகளையும் பராமரிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான தனிப்பட்ட போக்குவரத்து அளவை தொடர்ந்து மேம்படுத்தவும் சீனா தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது சீனா வுக்கான அனைத்து சுற்றுலா விசாக்களை யும் இந்தியா நிறுத்தி வைத்திருந்தது. சீனாவும் இந்தியக் குடிமக்கள் உள்ளிட்ட பிற வெளிநாட்டினருக்கான விசாக்களை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் 2022 இல் மாணவர்கள் மற்றும் வணிகப் பயணிகளுக்கான விசா கட்டுப்பாடு களை நீக்கியது.  எனினும் இந்தியாவுடன் ஏற்பட்டு வந்த எல்லைப் பிரச்சனை உள்ளிட்ட பல முரண்பாட்டின் காரணமாக விசா அனுமதி யில் இந்தியத் தரப்பில் சில கட்டுப்பாடு களும் தடைகளும் தொடர்ந்தன.  இந்நிலையில் 2025 இன் துவக்கத் தில் இருந்தே இந்தியாவும் சீனாவும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் சமரசத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் வெளிப்பாடாக ஜனவரி மாதம் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நேரடி வணிக விமான போக்குவரத்தை அனுமதிக்க இரு நாடுகளும் முன்வந்தன. தற்போது சீன மக்களுக்கான சுற்றுலா விசாவை இந்தியா மீண்டும் வழங்கத் துவங்கியுள்ளது.