tamilnadu

img

ராமேஸ்வரம் மாணவி கொலை: முனியராஜுக்கு டிச.3 வரை நீதிமன்ற காவல்

ராமேஸ்வரத்தில், காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முனியராஜை, டிச.3 வரை நீதிமன்ற காவலில் வைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் - கவிதா தம்பதியின் மகள் பர்வதவர்த்தினி (17), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பில் பயின்று வந்தார்.  இவர், நவ. 19-ஆம் தேதியன்று காலை 8.30 மணியளவில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி,  முத்துமாரி தம்பதியின் மகன் முனியராஜ் (20) என்பவர் வழிமறித்து கத்தியால் கழுத்தில் குத்தி கொடூரமாக படுகொலை செய்தார். மாணவியை ஒரு தலைபட்சமாக முனியராஜ் காதலித்ததாகவும், இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்த நிலையிலேயே, அவரைப் படுகொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் முனியராஜை கைது செய்து போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் டிச.3 வரை நீதிமன்ற காவலில் வைக்க ராமேஸ்வரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து, முனியராஜ் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.