tamilnadu

img

புதுக்கோட்டை: அகில இந்திய மாநாட்டு நிதி ரூ.6 லட்சம் வழங்கல்

புதுக்கோட்டை: அகில இந்திய மாநாட்டு நிதி ரூ.6 லட்சம் வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில்,  அகில இந்திய மாநாட்டு நிதி நான்கா வது தவணையாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது. கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழுக்கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் தலைமையில் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய மாநாட்டுப் பணிகள் குறித்து மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.  நாகராஜன் பேசினார். அவரிடம், அகில இந்திய மாநாட்டு நிதி நான்காவது தவணையாக ரூ.6 லட்சம் மாவட்டக் குழு சார்பில் வழங்கப்பட்டது.  ஏற்கனவே, மூன்று தவணையாக ரூ.12 லட்சம் வழங்கப்பட்டுள்ள நிலை யில் நான்காவது தவணையாக வழங்கப் பட்ட ரூ.6 லட்சமும் சேர்த்து ரூ.18 லட்சம் என்ற நிதி இலக்கை கட்சியின் புதுக் கோட்டை மாவட்டக்குழு நிறைவு செய்துள்ளது.  நடைபெற்ற வேலைகள் குறித்து மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் பேசி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எஸ். கவிவர்மன், ஏ.ராமையன், கே. சண்முகம், ஜி. நாகராஜன், த. அன்பழகன், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், கி.ஜெயபாலன், டி.சலோம் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.