tamilnadu

img

தமிழக அரசின் கல்விக் கொள்கை அறிக்கையை வெளியிடுக!

தமிழக அரசின் கல்விக் கொள்கை அறிக்கையை வெளியிடுக!

திண்டுக்கல், மே 4- தமிழக அரசு அமைத்த நீதி யரசர் முருகேசன் குழுவின் கல்விக் கொள்கை அறிக்கையை ஏன் வெளி யிடவில்லை என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பியுள்ளது. திண்டுக்கல்லில் நடந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாநாட்டு பொதுக்கூட் டத்தில், பொதுச்செயலாளர் ச.மயில் பேசு கையில், “தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்று சொல்லும் தமிழக அரசு, மாநிலத்திற்கான தனி கல்விக் கொள்கையை வகுக்க நீதியரசர் முரு கேசன் தலைமையில் குழு அமைத்தது.  அந்த குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால் அரசு அதை ஏன் வெளியிட வில்லை” என்று கேள்வி எழுப்பினார். 5 வயது குழந்தைகளுக்கு ஆன்லைன் தேர்வா? “தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் தமிழக அரசே, 1ம் வகுப்பில் சேரும் 5 வயது குழந்தைகளுக்கு ஒரு  வாரத்தில் ஆன்லைன் தேர்வு நடத்துவது எந்த கல்விக் கொள்கை? பள்ளியில் சேர்ந்த குழந்தை பயிற்சி பெற குறைந்தது ஒரு மாதமாவது தேவை. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார் மயில். மத்திய அரசின் கல்வித் திட்டங்கள் விமர்சனம் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவை “அடாவடித்தனம்” என்று விமர்சித்த அவர், “ஒன்றிய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் ஏமாற்றியது போல், தமிழக அரசும் 2 விழுக்காடு மட்டுமே அறி வித்துள்ளது. விலைவாசி உயர்வு  2.98 விழுக்காடு என்று சொல்லும் போது, 3 விழுக்காடு கொடுக்க வேண்டும்” என்றார். கேரளா மாதிரி பின்பற்ற வேண்டும் “கேரளாவில் ஒரு வகுப்பில் 5 மாணவர் கள் இருந்தாலும் ஒரு ஆசிரியர் நியமிக்கப் படுகிறார். தமிழ்நாட்டில் 60 மாணவர் களுக்கு 2 ஆசிரியர்கள் மட்டுமே. 75 மாண வர்கள் இருந்தால்தான் 3வது ஆசிரியர். இதனால்தான் கேரள அரசுப் பள்ளிகள் வள ர்ச்சியடைகின்றன” என்று அவர்குறிப்பிட்டார். போராட்ட எச்சரிக்கை “எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 50,000 ஆசிரியர்கள் சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்துவோம் என்று மயில்  எச்சரித்தார். கல்வி வணிகமயமாவதை தடுக்கவேண்டும் “இந்த மாநாட்டில் 20,000 ஆசிரியர்கள் பங்கேற்றது தமிழ்நாட்டில் எந்த ஆசிரியர் அமைப்பும் சாதிக்காத சாதனை. நாங்கள் வெறும் ஊதியக் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடவில்லை. தேசிய கல்விக் கொள்கையின் திணிப்பை எதிர்க்கிறோம்” என்றும் மயில் தெரிவித்தார்.