பொதுமக்கள் பணம் கையாடல் அஞ்சலக ஊழியரை கைது செய்து பணத்தை மீட்டுத் தரக் கோரி போராட்டம்
திருச்சிராப்பள்ளி, மே 21 - திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவளர்ச் சோலை அருகே உள்ள உத்தமர்சீலியில் திரு வானைக்கோவில் கிளை அஞ்சல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அஞ்சலகத்தில் லதா என்ற பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடு, பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதி களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இந்த அஞ்சல் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, மாதாந்திர சேமிப்பு திட்டம் போன்ற பல திட்டங்களின்கீழ் பணம் சேமித்து வரு கின்றனர். பல வருடங்களாக ஒரே அஞ்சல் நிலையத் தில் லதா பணியாற்றி வருவதால் கிராம மக்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான அவர், கிராம மக்களின் பேரன்பையும், நம்பிக் கையும் பெற்றுள்ளார். இந்நிலையில் பொது மக்கள் தங்களது கணக்கில் பணத்தை வரவு வைக்கவும், சேமிக்கவும் கொடுக்கும் பணத்தை அந்த அஞ்சலக ஊழியர் பெற்றுக்கொண்டு திருவானைக்கோவில் அலுவலகத்தில், தானே வரவு வைத்துக் கொள்வாராம். மேலும் பெரும்பாலானோர் சேமிப்பு கணக்கு புத்தகத்தை தானே பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறி பணத்தையும் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஓய்வுபெற்ற மின்சார வாரிய ஊழியர் ஒருவர், தான் பிக்சடு டெபாசிட் செய்த ரூ.3 லட்சத்தை எடுப்பதற்கு சென்ற போது, கணக்கில் பணம் இல்லாததை அறிந்து அதிர்ச்சி யடைந்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, தான் பணத்தை எடுத்து செலவு செய்துவிட்டதாகவும் சில நாட்களில் திருப்பித் தருவதாகவும் அந்த நபரிடம் கூறியிருக்கிறார். இச்சம்பவம் அந்த பகுதியில் பரவியதை தொடர்ந்து, கிராம மக்கள் அவரவர் சேமிப்பு கணக்கை ஆய்வு செய் வதற்காக அஞ்சல் நிலை யத்திற்குச் சென்றுள்ள னர். அப்போது ஊழியர் விடுமுறை என்பதை அறிந்த பொதுமக்கள், சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த திரு வானைக்கோவில் அஞ்சல் நிலைய ஊழி யர்கள் உத்தமர்சீலிக்கு புறப்பட்டு வந்து, சேமிப்பு கணக்கு வைத்தவர்களிடம் விசாரணை நடத்திய போது 25 லட்சம் ரூபாய்க்கு மேல் கை யாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, உத்தமர் சீலி கிராமத்தில் அஞ்சல்துறை அலுவலகத்தில் சேமிப்பு, வைப்பு நிதி, சிறு சேமிப்பு நிதியை கையாடல் செய்த அஞ்சலக செயலாளர் லதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை திரும்ப வழங்க அஞ்சல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உத்தமர்சீலி பொதுமக்கள் புதனன்று ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்திற்கு சிபிஎம் இடைக்கமிட்டி உறுப்பினர் வீரமுத்து தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வம், மாவட்ட செயற் குழு உறுப்பினர் லெனின், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, விவசாயத் தொழிலாளர் சங்க மாநகர் மாவட்டப் பொருளாளர் இளங்கோ வன், உத்தமர்சீலி கிளைச் செயலாளர் செல்வ குமார் ஆகியோர் பேசினர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில், கோட்ட கண்காணிப்பாளர் கூறுகையில், “புத்தகங்க ளில் வரவு வைக்கப்பட்டுள்ள பணத்தை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுவரை எவ்வளவு மோசடி நடந்து உள்ளது என விசாரணை நடத்தி, அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.