நகைக்கடை உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
நாமக்கல், மே 21- நாமக்கல் மாநகராட்சி பகுதியிலுள்ள நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் நகை வியாபாரிகள், சந்தேகப்படும்படியான பழைய நகைகளை வாங்க வேண்டாம், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் தெரிவித்துள்ளார். நாமக்கல் காவல் நிலையத்தில், மாநகர நகைக்கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், காவல் கண்கா ணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் தலைமையில் புதனன்று நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ஜோஷி முன் னிலை வகித்தார். இதில் தங்க. நகைக்கடை உரிமையாளர்கள் உரிய விதிமுறைகளுடன் செயல்பட்டு, திருட்டு நகைகளை வாங்கக் கூடாது என்றும், பழைய குற்றவாளிகள் கடைக்குள் நகை விற்க வரும்போது அவர் களின் முகங்களை கண்டறியும் சாதனம் போன் றவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்பின் காவல் கண்காணிப்பாளர் பேசு கையில், தமிழ்நாட்டில் தங்க நகைகளுக் காக நடைபெற்ற ஆதாய கொள்ளை - கொலை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு துணையாக இருந்த நகை தொழிலில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகை களை யாரேனும், தங்க நகை கடைகள் மற்றும் வியாபாரிகளிடம் விற்பனைக்காக கொண்டு வந்தால் அவற்றை வாங்க வேண்டாம். உடன டியாக அதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யாராக இருந்தாலும் நகைகளை விற்க வரும்போது, அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து, நகை விற்க வருபவரிடம் நகை யுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். உரிய ரசீது வழங்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் 3,500 வீடுகள் தனியாக சாலையோரம் விவசாயப் பண்ணையுடன் இணைந்துள்ளன. அந்த வீடுகளை இரவு நேரங்களில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுபோன்ற தனியாக, விவசாய பண்ணை வீடுகளில் வசித்து வருபவர்கள் தங்கள் வீடுகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். குற்றங்களை தடுக்க ஒத்து ழைக்க வேண்டும், என்றார். இக்கூட்டத்தில், காவல் உதவி ஆய்வா ளர் சாந்தகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி கள் கருமலை, சிவ.சிதம்பரம், கிரிதரன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.